வீட்டுக் கதவுகளை தானாக திறக்கும் டெக்னாலஜி: இணையத்தில் வைரல் !
வீட்டுக் கதவுகளை சிப் மூலம் தானாக திறக்கும் டெக்னாலஜி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
தற்போது இருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலமாக பல்வேறு விஷயங்களை உலகம் எதிர் நோக்கி கொண்டு வருகிறது. நேர்மறையான தொழில்நுட்பம் மனிதர்களுக்கு எப்பொழுதும் நன்மை பயக்கும் வீதமாக அமைகின்றது. அந்த வகையில் தற்போது பெண் ஒருவர் தன் வீட்டின் கதவுகளை சாவி இன்றி திறக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அவரது கையில் உள்ள சிப் ஒன்றின் மூலம் தான் கதவை திறக்க முடிவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண்மணி கூறுகையில், "ஜூன் 25, 2020 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனது கையில் என் கணவர் கூறியபடி, RFID என்ற சிப் பொருத்தப்பட்டது. நான் வேண்டாம் என்று கூறினேன். என்னுடய கணவர் கேட்கவில்லை. என்னை சமாதானம் செய்து, அந்த சிப்பை என் கையில் பொருத்தினார்கள். இதனால் தற்போது எங்களது வீட்டை சாவி இல்லாமலே என்னால் திறக்க முடிகிறது. எப்படி சாவி இல்லாமல் திறக்கிறேன் என்று பாருங்கள் என்று சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டார்.
அந்த வீடியோவில், தன்னுடைய வீட்டிற்கு செல்லும் அந்த பெண், வீட்டின் வாசலின் அருகே செல்கிறார். அவரது வீடு முழுவதும் சென்சார்களால் இணைக்கப்பட்டது ஆகும். வீட்டின் வாசலில் உள்ள சென்சார் கருவியின் பக்கத்தில் சிப் பொருத்தப்பட்ட கையினை கொண்டு செல்கிறார். உடனே, கதவானது திறக்கிறது. பிறகு வீட்டின் உள்ளே சென்று அங்குள்ள ஒரு கப்போர்டை தன் கையில் உள்ள சிப்பின் மூலம் திறக்கிறார். இந்த வீடியோவை அவர் டிக்டாக்கில் பகிர, 10 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
Input & Image courtesy:News 18