தொலைத்தொடர்பு சேவை நிறுவன தரம் குறித்து டிராய் ஆய்வு: 5G சேவை அளிப்பதில் சிக்கல் உள்ளதா?

தொலைத்தொடர்பு சேவை விநியோக நிறுவனங்களிடம் அலைவரிசையின் தரம் குறித்து டிராய் ஆய்வு.

Update: 2023-02-21 05:11 GMT

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் முக்கியத் தொலைத்தொடர்பு சேவை விநியோக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தியது. அப்போது, அலைவரிசையின் தரம் பற்றிய நுகர்வோரின் கருத்துக்கள் மற்றும் வர்த்தகத் தொலைத்தொடர்பு இணைப்புகள் குறித்து ஆய்வு நடத்தியது. அலைவரிசை சேவையின் தரத்தைப் பொறுத்தவரை, தரத்தை அதிகரிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் என வலியுறுத்தப்பட்டது.


மேலும், ஒருமுனையில் மட்டுமே பேசும் வசதி கொண்ட விளம்பரங்கள் உள்ளிட்ட நுகர்வோர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்குமாறும் டிராய் கேட்டுக்கொண்டது. 5G அலைவரிசையை அளிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. நீண்ட நேரம் இணையதள வசதியைப் பயன்படுத்தும்போது, அதன் பயன்பாட்டை கண்காணிக்குமாறு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் டிராயிடம் கோரிக்கை முன்வைத்தன.


நுகர்வோருக்கு டெலிமார்க்கெட்டர்கள் மூலம் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு சேவை விநியோக நிறுவனங்களுக்கு டிராய் அறிவுறுத்தியது. அதேபோல், நுகர்வோரின் எண்கள் அங்கீகரிக்கப்படாத டெலிமார்க்கெட்டர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு பரிமாறப் படுவதைக் கட்டாயம் தடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News