இந்தியாவில் அனுமதியே இல்லை! ஸ்டார்லிங்க் இணைய சேவை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை - தொலைத்தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Telecommunications Department warns public against subscribing Starlink Internet Services in India

Update: 2021-12-02 00:45 GMT

ஸ்டார்லிங்க் சேவைகள் நிறுவனம் அரசின் உரிமம் மற்றும் அங்கீகாரம் இல்லாமல் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் அந்த நிறுவனத்தின் வலைதளத்தை மக்கள் பயன்படுத்தி வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவைகளை வழங்க மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையில் இருந்து உரிய உரிமம் பெற வேண்டியது அவசியமாகும். இத்தகைய உரிமம் இன்றி மேற்கூறிய நிறுவனம் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் இந்த நிறுவனத்தின் வலைதளத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இந்த சேவைகளுக்கு சந்தா செலுத்த வேண்டாமென்றும் கேட்டுக் கொள்ளப்படுவதாக தொலைத்தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் இரண்டாவது பெரும் பணக்காரராகக் குறுகிய காலத்தில் உயர்ந்த எலான் மஸ்க்குடைய ஸ்பேஸ் X நிறுவனம் ஸ்டார்லிங்க் என்ற பெயரில் இந்தியாவில் பிராட்பேண்ட் சேவையை அடுத்த வருடத்திலிருந்து தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான அனுமதி வேண்டி கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்திடம் (Telephone Regulatory Authority of India - TRAI) விண்ணப்பித்துள்ளது.

ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் சேவைகள் இந்தியாவின் மிக விரைவான பிராட்பேண்ட் சேவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Similar News