தமிழக இளநீர் வியாபாரியை மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமர்!
மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் தமிழக இளநீர் வியாபாரி பெண்ணை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய ஒன்று. குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மக்களுக்கு கல்வி கிடைக்க அரசின் சார்பில் அரசு பள்ளிகளில் நடந்து வருகிறது. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் ஒரே நோக்கம் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான். ஆனால் சில மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இருக்கும் பள்ளிக்கூடங்கள் மிகப்பெரிய அளவில் விரிவடைவது இல்லை.குறிப்பாக நடுநிலைப்பள்ளி வரையில்தான் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அதற்கு மேற்பட்ட படிப்புக்கு செல்வதற்கு அருகில் உள்ள பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகிலுள்ள சின்னவீரம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் LKG முதல் எட்டாம் வகுப்பு வரையான பாடங்கள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. மேற்கொண்டு வகுப்புகள் எடுப்பதற்கு கட்டிடங்கள் இல்லை என்று காரணம். அதனால் தான் மேற்கொண்டு வகுப்பறைகளை கட்டுவதற்கு நிதியை திரட்டுவதற்கு முயற்சிகள் எடுத்து வந்தது பள்ளி நிர்வாகம் இதனை அறிந்த அந்தப் பகுதியின் இளநீர் வியாபாரியான தாயம்மாள் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாயும் பள்ளிக்காக நன்கொடையாக அளித்து உள்ளார்.
எனவே இந்த ஒரு செயலை தற்போது மான் கீ பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். மேலும் இதுபற்றி தாயம்மாள் கூறுகையில், "நான் பெரிதாக படிக்கவில்லை. என் கணவர், என் மகள், மகன் ஆகியோர் இந்த பள்ளியில்தான் படித்தார்கள். கல்வியின் முக்கியத்துவம் மூலம் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். எனவே அதற்காக முயற்சி மேற்கொண்டு வரும் பள்ளிக்கு இந்த பணத்தை கொடுத்து இருக்கிறேன். மேலும் பிரதமரின் பாராட்டுப் பெற்றது பெருமகிழ்ச்சி அளிக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
Input & Image courtesy: News 18