ஹரிவராசனத்தையும் விட்டுவைக்காத மிஷனரிகள் - கொதிக்கும் ஐயப்ப பக்தர்கள்.!
ஹரிவராசனத்தையும் விட்டுவைக்காத மிஷனரிகள் - கொதிக்கும் ஐயப்ப பக்தர்கள்.!;
இந்து மத அடையாளங்களையும் கலாச்சாரத்தையும் காப்பி அடித்து வரும் கிறிஸ்தவர்கள், புதிய உச்சமாக சுவாமி ஐயப்பனை உறங்க வைக்க இசைக்கப்படும் ஹரிவராசனம் பாடலைக் காப்பி அடித்து இயேசுவுக்கு பாடல் இயற்றியுள்ளனர். கேரளாவில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பிரபலமான பாடல் ஹரிவராசனம்.
Finally we lost Bhagwan Ayappan's song also.
— Indu Makkal Katchi - இந்து மக்கள் கட்சி ( Off ) (@Indumakalktchi) December 16, 2020
Shameless Xian Missionaries. pic.twitter.com/6L8OlEatL6
ஹரிஹராத்மக அஷ்டகம் என்ற சமஸ்கிருத பாடலாக இயற்றப்பட்டு கடந்த 1957ஆம் ஆண்டு சுவாமி ஐயப்பன் திரைப்படத்துக்காக இசையமைப்பாளர் தேவராஜன் இசையில், ஐயப்ப பக்தரான ஜேசுதாஸ் குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. 352 எழுத்துக்கள்,108 வார்த்தைகள் கொண்ட 8 பத்திகளாக அமைந்துள்ள ஹரிவராசனம் பாடல் சபரிமலையில் தினமும் மாலை நேர பூஜைக்குப் பின்னர் சுவாமி ஐயப்பனை நித்திரைக்கு அழைத்துச் செல்ல இசைக்கப்படுகிறது.
ஹரிவராசனம் பாடல் ஒலிக்கத் துவங்கிய உடன் பூஜாரிகள் ஒவ்வொருவராக சன்னிதானத்தில் இருந்த வெளியேறத் தொடங்குவராம். மேல் சாந்தி ஒவ்வொரு விளக்காக அணைத்துக் கொண்டே வந்து இறுதியாக கடைசி வரி இசைக்கப்படும் போது கதவுகளைப் பூட்டி விட்டு சுவாமி ஐயப்பனை நித்திரை கொள்ளச் செய்து விட்டு வெளியேறுவாராம்.
நாட்டில் ஹரிவராசனம் பாடல் ஒலிக்காத ஐயப்ப பக்தர்கள் வீடே இல்லை எனும் அளவுக்கு புகழ் பெற்ற பாடல் இது. மத மற்றும் கலாச்சார ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தகைய பாடலைத் தான் கிறிஸ்தவர்கள் காப்பி அடித்திருக்கிறார்கள். காப்பி ரைட்ஸ் பிரச்சினை ஒருபுறம் இருக்க, கிறிஸ்தவர்களே இந்த செயலை விமர்சித்து வருகிறார்கள்.இந்துக்களுக்கு ஆதரவாக கிறிஸ்தவர்கள் விமர்சிப்பதாக நினைத்தால் அது தவறு. சிலை வழிபாட்டில் ஈடுபடுபவர்களைக் குறிக்கும் Pagan என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பலரும் எதிர்மறையாக விமர்சித்து இருக்கின்றனர். அமெரிக்காவில் சிகாகோ திருச்சபையில் பாதிரியாராக உள்ள ஃபிரான்சிஸ் நம்பியப்பரம்பில் என்பவர் தான் ஹரிவராசனம் பாடலின் இசைக்கு யேசுவைப் புகழ்ந்து பாடல் வரிகீளை எழுதி பாடவும் செய்திருக்கிறார்.