பெண்களுக்கு மேலும் ஒரு தடை விதித்த தலிபான் அரசு - எதில் தெரியுமா?
என்.ஜி.ஓ நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை விதித்து தலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.;
என்.ஜி.ஓ நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை விதித்து தலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அபிகானில் தலிபான் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்த அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அங்கு பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஆடைகளை அணிவதில் விதிகளை மீறியதாக மறு அறிவிப்பு வரும் வரையில் பெண் ஊழியர்கள் என்.ஜி.ஓ நிறுவனங்களில் பணிபுரிய தடை விதிக்கப்படுவதாக பொருளாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல் ரகுமான் ஹபீப் அறிவித்துள்ளார்.