ரோட்டில் இருக்கும் சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்த காகங்களுக்கு பயிற்சி!
ரோட்டில் கிடக்கும் சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்த கார்களுக்கு பயிற்சியளிக்கும் சுவிடன் சேர்ந்த நிறுவனம்.
சுற்றுச்சூழலை மேம்படுத்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆனால் பெரும்பாலும் மனிதர்கள் தான் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை சரியான முறையில் அப்புறப்படுத்தாமல் தெருக்களிலும், வீடுகளிலும் அப்படியே விட்டு செல்கிறார்கள். இதன் காரணமாக சுமார் உலக அளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான கழிவு பொருட்கள் பயன்படாமல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கின்றது. அந்த வகையில் இந்தியாவில் மட்டும் சுமார் ஒவ்வொரு ஆண்டும் 26,000 டன்களுக்கும் அதிகமான கழிவுகள் சிகரெட் துண்டுகளால் உருவாகுகின்றன. இதை உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை.
எனவே இவற்றிற்கு தகுந்த தீர்வு காணும் வகையில் தற்போது சுவிடன் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம், தற்பொழுது முயற்சி எடுத்த உள்ள புதுவிதமான முயற்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் செயல் பெரிய அளவிலான கவனத்தை பெற காரணம், அவர்கள் இத்தகைய செயல்களில் காகத்தை ஈடுபடுத்தியது தான். கோர்விட் க்ளீனிங் என்ற நிறுவனம், வெகுமதி அடிப்படையிலான அமைப்பின் மூலம், சிகரெட் துண்டுகளை சேகரிக்க காகங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
சிகரெட் துண்டுகளை எடுத்து வந்து, அதற்கு பதிலாக உணவு வழங்கும் ஒரு இயந்திரத்தை பயன்படுத்தி காகங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் காகங்களின் மூளையில் இந்த பயிற்சி ஒருவித மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது அவைகள் செய்யும் செயலுக்கு மாற்றாக உணவுகளை பெற முயற்சிக்கும். இதன்மூலம் குறைந்த நேரத்தில் நாம் சிகரெட் கழிவுகளை அப்புறப்படுத்த முடியும் என்பது நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Input & Image courtesy: News 18