கிறிஸ்துவ பள்ளி என்றால் தேசிய கீதத்தை புறக்கணிப்பதா? நோட்டீஸ் கொடுத்த கர்நாடகா அரசு!

பெங்களூருவில் தேசிய கீதத்தை புறக்கணித்ததற்காக மூன்று கிறிஸ்துவ பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-23 03:21 GMT

பெங்களூருவில் அமைந்துள்ள மூன்று மிகப்பெரிய கிறிஸ்துவ பள்ளிகளின் தேசிய கீதத்தை புறக்கணித்ததாக கர்நாடகாவின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு அமைச்சர் பி.சி.நாகேஷ் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மாநில அரசு அனைத்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு முந்தைய கல்லூரியில் மாணவர்களை தினமும் தேசிய கீதத்தை பாடுவதை கட்டாயமாக்கி தற்போது உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். பள்ளி விளையாட்டு அரங்கில் இதற்கான போதிய இடம் இல்லை என்றால் மாணவர்கள் வகுப்பில் இருந்தவாரே தேசிய கீதத்தை பாட அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


புகார் கொடுக்கப்பட்டுள்ள பெங்களூருவை சேர்ந்த 3 கிறிஸ்தவ பள்ளிகளான செயின்ட் ஜோசப் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, பிஷப் காட்டன் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் பால்ட்வின் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் தான் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தன்னுடைய துறையின் முதன்மைச் செயலாளருக்கு அனுப்பிய குறிப்பு, 2016 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி, மூன்று பள்ளிகளுக்குச் சென்று புகார்களை சரிபார்க்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும், அதன் பிறகு பள்ளிகளுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்ட உத்தரவிடப் பட்டுள்ளது.


இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "நாங்கள் எங்கள் பள்ளியில் தேசிய கீதத்தை தினமும் பாடி வருகிறோம் என்று கூறியுள்ளார். ஆனால் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் தான் எங்களுடைய வளாகத்தில் வழிபாடு கூட்டம் நடக்கப்படுகிறது. அப்பொழுது மாணவர்கள் அனைவரும் சேர்ந்து தேசிய கீதத்தை பாடுவார்கள்" என்று கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Hindu Post

Tags:    

Similar News