உலக நாடுகளுக்கு ஆபாசம், சினிமாவை காட்டிவிட்டு, சீன மக்களுக்கு கல்வியை போதிக்கும் டிக்டாக் செயலி - மாபெரும் சதி அம்பலமானது!
சீன நிறுவனமான பைட் டான்ஸுக்குச் சொந்தமான வீடியோ ஹோஸ்டிங் சேவையான TikTok, உலகம் முழுவதும் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்றாகும். இது பயனர்கள் குறுகிய வீடியோக்களை வெளியிட அனுமதிக்கிறது. இந்த செயலி மூலம் நிறைய உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் 'சமூக ஊடக நட்சத்திரங்களாக' மாறியுள்ளனர். இருப்பினும், இந்த பயன்பாட்டின் இருண்ட பக்கமும் உள்ளது
டிக்டாக் சீனாவில் டூயின் என்ற பெயரில் இயங்குகிறது. இது அதே சீன நிறுவனமான பைட் டான்ஸ்க்கு சொந்தமானது. மற்ற நாடுகளில் உள்ள பயனர்கள் TikTok இல் பார்க்கும் உள்ளடக்கத்துடன் ஒப்பிடும்போது, சீனாவில் அது விளம்பரப்படுத்துவது முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
அமெரிக்காவில் ஆபாசம், சினிமா, பொழுதுபோக்கு சார்ந்த வீடியோக்களை விளம்பரப்படுத்திவிட்டு, சீனாவில் கல்வி சார்ந்த வீடியோக்களை விளம்பரப்படுத்துகிறது. பெரும்பாலான வீடியோக்கள் தொழில்நுட்பம், கட்டிடக்கலை, இசை மற்றும் பயனர்களின் படைப்பாற்றலை அதிகரிக்கும் மற்றும் அவர்களின் திறமையை மேம்படுத்த உதவுபவையாக உள்ளன.
தங்கள் நாட்டு மக்கள் அறிவை வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள சீனா, இதுபோன்ற ஆப்களை வைத்து மற்ற நாட்டு மக்களை முட்டாளாக்கி வருகிறது.