நூலகங்களுக்காக புத்தக டெண்டர் அறிவிப்பில் சர்ச்சை: வெளிப்படை தன்மை இல்லையா?
தமிழக நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் டெண்டர் அறிவிப்பில் ஏற்பட்ட சர்ச்சை.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் பள்ளி கல்வித்துறையின் டெண்டர் வெளிப்படையாக இல்லை என்று குற்றச்சாட்டு எழுதப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகள், கல்வி அலுவலகங்கள், கல்வி டி.வி உள்ளிட்டவர்களின் பல்வேறு வகையான கொள்முதல்களுக்கு தமிழக அரசின் இ -டென்டரில் ஒப்பந்த பள்ளி அறிவிக்கப்பட்டது இல்லை. மாறாக துறையின் இணையதளத்தில் தனியாக ஒப்பந்த புள்ளி வெளியிடப்படுகிறது.
இதனால் டெண்டர் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வரிசையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி நூலகங்களுக்கான 37,000 புத்தகம் விநியோகம் செய்ய வேண்டும் என்ற தனி இணையதளத்தில் மூலமாக டெண்டர் அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்த டெண்டர் அறிவிப்பு வெளிப்படையாக நிர்வாகத்தின் படி அனைவரும் பார்க்கக் கூடிய வகையில் இல்லை. மாறாக டெண்டர் அறிக்கை தெரிந்து கொள்ள ஈ-மெயில் முகவரி மற்றும் சில தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதன் பிறகு டென்டரில் உள்ள அம்சங்களை தெரிந்து கொள்ள முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு இந்து விவகாரத்தில் தலையிட்டு தற்போதைய புத்தக கொள்முதல் டெண்டர் அறிவிப்பு ரத்து செய்துவிட்டு வெளிப்படையான முறையில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுபட்டு வருகிறது.
Input & Image courtesy: Dinamalar