தமிழகத்தில் ஹிஜாப் அணிய தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
தமிழகத்திலும் மாணவர்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.;
கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினை தற்போதும் பேச்சு பொருளாக இருந்து வருகிறது. குறிப்பாக அங்குள்ள இஸ்லாமியர்களை மூளை சலவை செய்து சிலர் இத்தகைய செயல்களில் பின்னணியில் இருப்பதாகும் கூறப்படுகிறது. எனவே கர்நாடகாவில் தோன்றி இந்த ஒரு பெரும் பிரச்சனை உலகமெங்கும் உள்ள பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில் தற்போது தமிழகத்திலும் மதம் சம்பந்தப்பட்ட ஆடைகளை அணிவதற்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்து முன்னேற்ற கழக தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, கர்நாடகாவில் தோன்றிய ஹிஜாப் அணிந்த பிரச்சனை தமிழகத்திலும் தோன்றாமல் படுப்பதற்கு முன் கூட்டியே தமிழகத்தில் பள்ளிகள் கல்வி நிலையங்களில் மாணவர்கள் மத அடையாளம் சம்பந்தமான உடைகளை அணிந்து வருவதற்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது சம்பந்தமாக இந்து முன்னேற்றக் கழகத் தலைவரும் வழக்கறிஞருமான கோபிநாத் அவர்கள் கூறுகையில், " 1960ஆம் ஆண்டு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே ஒற்றுமையை கடைபிடிக்கும் என்றவகையில் அப்பொழுது பள்ளி சீருடை கொண்டுவரப்பட்டது. எனவே அனைவரும் சமம் மற்றும் ஏற்றத்தாழ்வை நீக்குவதற்காக அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு அம்சம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது பல்வேறு பள்ளிகள் இதை பின்பற்றுவது இல்லை. ஹிஜாப் போன்ற மத உடைகளை அணிவதை தவிர்த்து பள்ளி சீருடைகளை அனைவருக்கும் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Input & Image courtesy: Zee News