200 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் வரும் நாள்: 22.02.2022-ல் என்ன சிறப்பு?
இன்றைய நாள் 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தான் வருமாம் சமூக வலைத்தளத்தில் வைரலாகும் இன்றைய தினம்.
எண் கணிதத்தை பொறுத்தவரையில் இரண்டு என்ற எண்ணிற்கு சிறப்பு இடம் உண்டாம். அதே மாதிரி இரண்டு எண்கள் அடங்கிய இந்த நாள் 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தான் வருமாம். இதை பற்றிய பதிவுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இன்றைய தினத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஏதேனும் இருக்கிறதா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் அது அல்ல இன்றைய தினத்தை நீங்கள் 22.2.22 என்றும் கூட எழுதலாம். இந்த தேதி ஒரு செமட்ரிக்கள் (symmetrical) அல்லது பாலிண்ட்ரோம் (palindrome) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் 22. 02. 2022 என்ற இந்த எண்கள் பின்னோக்கியும், முன்னோக்கியும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது.
ஒருவர் தங்களுடைய வாழ்நாளில் ஒரு தடவை மட்டும் தான் இந்த நாளை பார்க்க முடியுமாம். ஏனெனில் இந்த நாள் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தான் வரும் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. எனவே நாம் மேலே குறிப்பிட்டபடி நம்முடைய வாழ்நாளில் இந்த சிறப்பு தேதியை பார்ப்பது இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும். மேலும் இன்றைய நாளில் பல்வேறு இரண்டு கொண்ட எண்கள் அடங்கி இருப்பதால் இதனை நெட்டிசன்கள் இந்த நாள் Tuesday வை தற்பொழுது Twosday ஆக மாற்றி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அதுவும்கூட சீனாவிலும் இரண்டு என்ற எண்ணிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனை அவர்கள் அதிர்ஷ்டவசமாக கருதுகிறார்கள். இதன் காரணமாக இன்று Twosday கொண்டாட்டத்தில் பல்வேறு சீனர்கள் தங்களுடைய திருமணத்தை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. கூகுளும் தற்பொழுது இதனை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு வகையான வாழ்த்துக்களை உருவாக்கி வருகிறது. குறிப்பாக 'Happy Twosday 2 you' அந்த போன்ற வசனங்களும் அடங்குகிறது.
Input & Image courtesy: Indiatv News