குஜராத்தியில் பதிவிட்ட சந்திர சேகர் ராவ், பதிலுக்கு உருது மொழியில் பதிலளித்த தெலுங்கானா பா.ஜ.க - முற்றும் மோதல்!
தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு குஜராத்தி மொழியில் சில ட்விட்டர் பதிவுகள் பதிவிடப்பட்டன.
அதில், தெலுங்கானாவில் டிஆர்எஸ் அரசு செய்த வளர்ச்சித் திட்டங்களை மோடிஜியும் அவரது கட்சியும் அங்கீகரிக்கத் தவறிவிட்டனர். பிரதமரின் விருப்பமான மொழியில் தெலுங்கானாவின் சாதனைகள் இதோ எனக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தனர்.
அதற்கு உருது மொழியில் அந்த மாநில பாஜக பதிலளித்துள்ளது. பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், சந்திரசேகர் ராவும், தாருஸ்ஸலாம் சூப்பர் சி.எம்.மும் அவர்களுக்கு விருப்பமான மொழியில் சொன்னால் கேட்பார்களா என்று பார்ப்போம் எனக் குறிப்பிட்டு உருது மொழியில் பதில் அளித்துள்ளது பாஜக.
ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியுடன் டி.ஆர்.எஸ் கட்சி நட்பு பாராட்டி வருவதைக் குறிக்கும் வகையில் பாஜக உருது மொழியில் ட்வீட் செய்துள்ளது. இந்த விவகாரம் தெலுங்கானா மாநில அரசியலில் பரபரப்பு விவாதமாகியுள்ளது.
Input From: Oneindia