புதுவித வாகனத்தை பயன்படுத்தும் குடும்பத்தின் வீடியோ: பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா!
புதுவிதமான ஒரு வாகனத்தை பயன்படுத்தும் குடும்பத்தின் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா.
இந்தியாவைப் பொருத்த வரையில் மக்கள் பெரும்பாலும் குடும்பத்திற்காக கார் போன்ற வாகனங்களை விரும்புகிறார்கள். ஏனெனில் குடும்பமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு அவர்களுக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தக்கூடிய ஒரு வாகனமாக கார்கள் விரும்பப்படுகிறது. ஆனால் ஏழை குடும்பத்திற்கு இத்தகைய கார்கள் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. ஆனால் இங்கு, மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தில் தேவராஷ்ட்ரே கிராமத்தைச் சேர்ந்தவர் தத்தாத்ரய. இவர் தன்னுடைய குடும்பத்திற்காக ஒரு வித்தியாசமான முறையில் கார் ஒன்றை உருவாக்கினார்.
இந்த காரின் வீடியோவை ஆனந்த் மகேந்திரா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது கார் போன்ற வடிவில் உள்ள இந்த வாகனத்தில், காரில் உள்ள அனைத்து வசதிகளும் குறிப்பாக காரில் உள்ள கியர், கிளட்ச், பிரேக்குகள் மற்றும் காரின் பிற பாகங்கள் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வாகனம் பார்ப்பதற்கு ஆட்டோ மாதிரித் தோன்றுகிறது. எனவே அனைத்துப் பாகங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு காராக இது அறியப்படுகிறது. இவற்றின் முழுமையாக உருவாக்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய்தான் செலவானது.
மேலும் அந்த நபரால் உருவாக்கப்பட்ட வாகனம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளதால் அவற்றை நிச்சயம் அதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. எனவே இத்தகைய காரணங்களால் ஆனந்த் மகேந்திரா அவர்கள் அவருக்கு அந்த புதுமையான ஜீப்பிற்கு பதிலாக பொலேரோ காரை வழங்க விரும்புகிறேன் என்று தன்னுடைய மற்றொரு ஒரு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy: Indianexpress