கோத்ரா ரயில் எரிப்பின் இந்துக்களின் புகைப்படத்தை நீக்கிய ட்விட்டர்- பட்டவர்த்தனமான தணிக்கை?
இடதுசாரி கொள்கைகளைச் சார்ந்துள்ளதாக குற்றம் சாட்டப்படும் டுவிட்டரில் தணிக்கைகள் நடைபெறுவது சமீப காலங்களில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அரசியல் ரீதியாக தணிக்கையில் ஈடுபடுவதாக ட்விட்டர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் குஜராத் கலவரத்தின் கோத்ரா ரயில் எரிப்பில் கொலை செய்யப்பட்ட ஹிந்துக்களின் புகைப்படங்களை பகிர்வதை ட்விட்டர் வேண்டுமென்றே தணிக்கை செய்வதாக பயனாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் புகைப்படத்தை ஒருபோதும் மறக்காதே என்ற தலைப்பில் வெளியிட்டதற்காக, சில கணங்கள் தனது கணக்கு கூட்ட பட்டதாக ஒரு ட்விட்டர் பயனாளர் கூறினார். தனது கணக்கை மறுபடியும் பயன்படுத்துவதற்கு அவர் அந்த ட்வீட்டை நீக்குமாறு ட்விட்டர் அவரை கேட்டுக்கொண்டது அல்லது அவர் மேல்முறையீடு செய்யலாம்.
இந்த பயனர் மேல்முறையீடு செய்தும் அதை கருத்தில் கொள்ளாமல் அவரது பதிவு தானாகவே அகற்றப்பட்டது. இதனால் அதை நீக்க அவர் முடிவு செய்தார். இது குறித்து தனது கண்டனங்களை தெரிவித்தார். "நீங்கள் இப்போது நிகழ்வுகளின் வரலாற்றின் போக்கை மாற்ற முயற்சிக்கிறீர்களா? சபர்மதி படுகொலை ஒருபோதும் நடக்கவில்லையா? நீங்கள் எனது பதிவை அளிக்க முடியும் ஆனால் உண்மையை உங்களால் மாற்ற முடியாது" என்று பதிலளித்துள்ளார்.
டெல்லி கலவரத்தின்போது IB துறையை சேர்ந்த அங்கித் சர்மாவின் கொடூரமான கொலையை விவரிக்கும் ஒரு படங்களை பகிர்ந்து கொண்ட மற்றொரு பயனருக்கு அந்த படங்கள் 'சென்சிட்டிவ் தகவல்கள்' என்று பெயரிடப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.