இந்தியாவின் விதிமுறையை ட்விட்டர் நிறுவனம் மீறிவிட்டது - எலான் மஸ்க் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்

இந்தியாவின் விதிமுறையை ட்விட்டர் மீறியதாக எலான் மஸ்க் நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-08-12 13:40 GMT

இந்தியாவின் விதிமுறையை ட்விட்டர் மீறியதாக எலான் மஸ்க் நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.


உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக ட்விட்டர் செயல்படுகிறது. முக்கியமாக விஷயங்களை பகிரவும், கருத்துக்களை தெரிவிக்கும் தளமாக ட்விட்டரை உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக தெரிவித்து இருந்தார்.


இதற்கான ஒப்பந்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் ட்விட்டரில் உள்ள போலிகணக்குகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்கள்.


ஆனால் ட்விட்டர் நிறுவனம் கூறியதை விட நாலு மடங்கு போலிகணக்குகள் இருப்பதாகவும் இது குறித்த முழுமையான தகவலை ட்விட்டர் கூறவில்லை என்பதால் ஒப்பந்தத்தை கைவிடப் போகிறேன் என எலான் மஸ்க் அறிவித்ததால் தகவல் உலகம் பெரிதும் அதிர்ந்தது. மேலும் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளும் 7% சரிந்தது இதனை அடுத்து ஒப்பந்தத்தை கைவிடுமாறு கூறிய எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனம் மீது அமெரிக்காவில் உள்ள தலாபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.


இதனால் எலான் மஸ்க் மற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் தரப்பு வாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.


எலான் மஸ்க் மற்றும் ட்விட்டர் நிறுவனத்திற்கு இடையே நடைபெறும் வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் ரகசிய பதிவு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் அதில் இந்தியாவிற்கும் ட்விட்டருக்கும் கடந்த ஓராண்டு காலத்திற்கு மேலாக நிலவி பிரச்சினை குறித்து தெளிவாக சொல்லவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.


மேலும் ட்விட்டரில் தேவையற்ற கருத்து பதிவுகளை பகிரும் தகவல்களின் பக்கங்களை இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2000 கீழ் நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தியது. இது குறித்து கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது எனவும் எலான் மஸ்க் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


இந்தியாவின் இந்த உத்தரவை மீறியதால் ட்விட்டர் மிகப்பெரிய சந்தை அபாயத்தில் சிக்கி உள்ளதாகவும் எலான் மஸ்க் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்து இருப்பதால் இந்த தகவல் பெறும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து ட்விட்டர் நிறுவனம் தெரிவிக்கையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்திய அரசாங்கம் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவித்ததில் இருந்து சில கணக்குகளை கண்காணித்து வருகிறோம் என கூறியுள்ளது. எனவே இந்திய அரசாங்கத்துடன் நிறுவனத்தின் தொடர்புகளை வெளியிட தேவையில்லை எனவும் ட்விட்டர் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா தனது மூன்றாவது பெரிய சந்தை இல்லை எனவும் தெரிவித்துள்ளது.


இவ்விளக்கு தொடர்ந்து அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் என்ன நடக்கும் இந்த சட்டப் போராட்டத்தில் ஜெயிப்பது எலான் மஸ்கா அல்லது ட்விட்டர் நிறுவனமா என்பதை உலகமே எதிர்பார்த்து காத்து இருக்கிறது.


Source -News 18 Tamil Nadu

Similar News