விரைவில் மாற இருக்கும் டுவிட்டரின் சின்னம் : எலான் மஸ்க் என்னதான் செய்யப்போறார்?

டுவிட்டர் சின்னம் விரைவில் மாற்றம் அடைய இருப்பதாக எலான் மஸ்க் அறிவிப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-24 06:45 GMT

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் பிரான்சிஸ்கோவை தலைமை இடமாகக் கொண்டு டுவிட்டர் நிறுவனம் செயல்படுகிறது.  இந்த டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரரான எலான் மாஸ்க் கடந்தாண்டு கைப்பற்றினார். அது முதல் டுவிட்டர் நிறுவனத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது டுவிட்டரின் சின்னமாக நீண்ட காலமாக உள்ள புறாவை விரைவில் மாற்ற உள்ளதாக அவர் கூறியுள்ளார் .


மேலும் ட்விட்டர் இனிமேல் எஸ்கோர்ப் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் எனவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் புறா சினத்திற்கு நாங்கள் விரைவில் விடை பெறுவோம் . அதேபோல் டுவிட்டர் நிறுவனத்திடம் இருந்தும் படிப்படியாக விடை பெறுவோம் என தெரிவித்துள்ளார். டுவிட்டர் சின்னமாக ஜப்பான் நாட்டின் ஷிபு இன வகை நாயைக்கொண்டு வந்தார். ஆனால் பலர் அதிருப்த தெரிவித்ததால் அந்த முடிவை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.


SOURCE :DAILY THANTHI

Similar News