ஆதரவற்றவர்களுக்கு உதவிய இந்தியர்: கௌரவித்த Uk அரசாங்கம்!

ஆதரவற்றவர்களுக்கு உதவியதற்காக இந்தியரை Uk கவுரவித்துள்ளது.;

Update: 2022-01-06 13:57 GMT
ஆதரவற்றவர்களுக்கு உதவிய இந்தியர்: கௌரவித்த Uk அரசாங்கம்!

UK அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய நபர்களை தேர்ந்தெடுத்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நியூ இயர் ஹானர்ஸ் என்ற பெயரில் விருதுகளை வழங்கி கவுரவித்து வரும். அந்த வகையில் தற்போது இந்த நோய் தொற்று காலத்தில் உணவை தவிர்ப்பவர்களுக்கு உதவிய காரணத்திற்காக இந்தியரை தேர்ந்தெடுத்து கௌரவிப்பது உள்ளது. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  


இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான அம்ரித்பால் சிங் மன் லண்டனில் உள்ள ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். சீக்கிய சமூகத்தினருக்கு இவர் செய்த சேவைக்காக அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டார். அம்ரித்பால் சிங் லண்டனிள் உள்ள கோவேன்ட் கார்டனில் ஒரு பஞ்சாபி உணவகத்தை நடத்தி வருகிறார். Uk-வில் இருக்கும் மிகவும் பழமையான வட இந்திய உணவகங்களில் இதுவும் ஒன்றாகும். இவருடைய உணவகத்தின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கி உள்ளார். 


கிட்டத்தட்ட இவர் 2 லட்சத்திற்கும் அதிகமான உணவுகளை மக்களுக்கு வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த செயலை கவுரவிக்கும் வகையில் UK அரசாங்கம் இவருக்கு OBE பதவியை வழங்கி உள்ளது. இதைப்பற்றி அவர் கூறுகையில், "எனக்கு முன்னர் இந்தச் சேவையை செய்த பலரையும் பார்த்து தான் எனக்கும் ஊரடங்கு காலத்தில் உணவு வழங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மற்றவர்களுடன் இணைந்துதான் நானும் என்னால் என்ன முடிந்த அந்த உதவியை செய்தேன். வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் எனது நன்றி" என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

Input & Image courtesy: News18




Tags:    

Similar News