உக்ரைன்: இந்தியாவின் உதவியால் நாடு திரும்பிய பாகிஸ்தான் பெண்ணின் நன்றி பதிவு!
இந்தியாவின் உதவியினால் நாடு திரும்பிய பாகிஸ்தான் பெண், பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அஸ்மா ஷபீக் என்ற பெண் ஒருவர் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்டு இப்பொழுது தன் சொந்த நாட்டை அடைந்த காரணத்திற்காக அவர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் நாடு திரும்பிய அவர் வெளியிட்ட வீடியோவில், பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கியேவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பது அந்த வீடியோவில் காட்சிகள் பதிவாகியுள்ளன. உக்ரைனில் பல நாடுகளால் கடுமையான வெளியேற்ற நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என்றாலும், சிலர் தங்கள் குடிமக்களுக்கு உதவ இயலாமையை வெளிப்படுத்தினாலும், போரினால் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் இந்தியர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதிசெய்ய அமைச்சர்கள் பறந்து செல்லும் அதன் வலுவான திட்டத்திற்காக இந்தியா பாராட்டப்படுகிறது.
இந்தியா தனது குடிமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்தது மட்டுமின்றி அண்டை நாடுகளுக்கும் உதவி வருகிறது. அந்த வகையில் தற்போது அண்டை நாட்டை சார்ந்த பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பாகிஸ்தானிற்கு திரும்பிய காரணத்திற்காக தனக்கு உதவிய இந்திய தூதரகம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்தியா தனது குடிமக்களுக்கு உதவி செய்வதில் உடனடியாகவும் இடைவிடாமலும் உள்ளது.
"இந்திய ஆபரேஷன் கங்கா தொடரும் போது சீனர்கள் தங்கள் வெளியேற்றத் திட்டங்களை ஒத்திவைத்துள்ளனர். இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் இந்தியர்களை அழைத்து வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீனா பயண ஆலோசனைகள் மற்றும் ஆதரவு வழிமுறைகளை வழங்கவில்லை என்ற போதிலும் அதே நேரத்தில் இந்தியா தொடர்பு எண்கள், ஆலோசனைகள் மற்றும் ஆதரவு வழிமுறைகளை தொடர்ந்து வெளியிட்டுள்ளது. இந்திய கொடியுடன் கூடிய பேருந்துகள் பாதுகாப்பான பாதையில் அனுப்பப்படுகின்றன" என்றும் கூறப்படுகின்றன.
Input & Image courtesy: News 18