உக்ரைனில் போர் ஒரு குற்றம்: ரஷ்ய விமானி சமூக வலைத்தளத்தில் கருத்து!
ரஷ்யா-உக்ரைன் போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்ய விமானி கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ ஒன்று ரஷ்ய உக்ரைன் போர் பற்றிய தெளிவான பரிந்துரைகளை எடுத்துரைக்கிறது. அந்த வீடியோவில் ரஷ்ய விமான பயணத்தின் போது, அந்த விமானத்தின் பைலட் ஒருவர் இண்டர்காம் மூலம் பேசுவதைக் காட்டுகிறது. அவர் உக்ரைன் மீதான தனது நாட்டின் தாக்குதலைக் கண்டிக்கிறார். அதே நேரத்தில் நடந்து வரும் மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும் இதுபற்றி அந்த வீடியோவை பத்திரிக்கையாளர் பிஜோட்ர் சௌர் ட்வீட் செய்துள்ளார். இந்த ட்விட்டர் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்ய விமானி இதுபற்றி மேலும் கூறுகையில், "உக்ரைனில் நடக்கும் போர் ஒரு குற்றம்" என்று நம்புவதாகக் கூறுகிறார். மேலும் ஒவ்வொரு விவேகமுள்ள குடிமக்களும் என்னுடன் உடன்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன். மேலும் அதை நிறுத்த எல்லாவற்றையும் செய்வார்கள், போருக்கான பொதுமக்களின் எதிர்ப்பைக் காண்பது அரிது என்று கூறியவுடன் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் கைதட்டல்களும் அவர் பெறுகிறார். உக்ரேனிய தூதர் ஓலெக்சாண்டர் ஷெர்பாவின் கூற்றுப்படி, விமானி ரஷ்யாவின் கொடி விமான நிறுவனமான ஏரோஃப்ளோட்டின் துணை நிறுவனமான போபேடாவில் பணிபுரிகிறார் என்று இந்த ட்விட்டை பற்றி கூறியுள்ளார்.
உக்ரைன் மக்கள் தங்கள் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் உள்ளனர். இந்த மோதலில் ஆயிரக்கணக்கான நபர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது, இது 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களை உக்ரைனை விட்டு வெளியேறத் தூண்டியது. ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாக உலகம் முழுவதும் எதிர்ப்புகள், புறக்கணிப்புகள் மற்றும் பொருளாதார தடைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, "அழிப்புப் போர்" என்று குறிப்பிடும் 17வது நாள், பெருகிவரும் உயிரிழப்புகளைக் கண்டது.
Input & Image courtesy: WION News