ராட்சச பட்டம் காரணமாக 120 அடி உயரம்வரை பறந்த இளைஞர்: என்ன ஆனது?

ராட்சச பட்டம் காரணமாக 120 அடி உயரம் வரை பரந்து இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

Update: 2021-12-23 14:03 GMT

ராட்சத பட்டம் காரணமாக பறந்த இளைஞரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பட்டம் விடுவதில் முன் அனுபவம் இல்லாத அந்த இளைஞர் தனக்கு தெரிந்த வித்தைகளை வைத்து ராட்சச பட்டம் விடுவதற்கு முயன்று உள்ளார். இறுதியில் இந்த முயற்சி என்பது விபரீதத்தில் அமைந்து அவர் காற்றின் வேகத்தில் தூக்கி செல்லப் பட்டுள்ளார். குறிப்பாக காற்றின் வேகத்தில் அவர் 120 உயரம் வரை தூக்கி செல்லப்பட்டுள்ளார். 


அங்கு கூடியிருந்த மக்கள் பலரும் அவர் தூக்கி சென்ற வேகத்தில் கீழிருந்து சத்தத்தை எழுப்பினார்கள். சிறிது நேரம் அந்த இடம் ஒரே பரபரப்பாக காணப்பட்டது. சிறிது தூரம் பறந்து சென்ற பிறகு அங்குள்ள மணல் திட்டில் அவர் கீழே விழுந்து இருப்பது அவருடைய உயிரை காப்பாற்றியுள்ளது. இந்த சம்பவம் குறிப்பாக இலங்கையில் உள்ள குரும்பசிட்டி பகுதியில் நடந்துள்ளது.


120 அடி உயரம் வரை பிறகும் அவர் உயர் பிழைத்து இருக்கும் சம்பவம் அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தை உள்ளாக்கி உள்ளது. எனவே முன் அனுபவமும் இல்லாமல் ஒரு செயலில் இறங்க கூடாது. அப்படி அந்த செயல்களில் இறங்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், நிச்சயம் பிறரின் உதவியை நாம் பெற வேண்டும் என்ற விஷயம் இந்த சம்பவத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ளலாம்.  

Input & Image courtesy: BBC News



Tags:    

Similar News