பழுதாகி நின்ற பேருந்து: மக்களுடன் சேர்ந்து தள்ளிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
பழுதாகி நின்ற பேருந்து மக்களுடன் சேர்ந்து தள்ள உதவிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.
இமாச்சல் பிரதேசத்தில் வருகின்ற 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறதோ இதன் காரணமாக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து பல்வேறு தலைவர்களும் அங்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராதாக்கூர் அவர்களும் பிரச்சாரம் செய்வதற்கு இமாச்சல் பிரதேசத்திற்கு சென்று இருக்கிறார். பிலாஸ்பூர் நகரத்திற்கு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கிறார்.
அமைச்சர் போகும் பாதையில் பேருந்து ஒன்று பழுதாகி சாலையில் நின்றது. இதன் காரணமாக சாலையில் சிறிது கூட்ட நெரிசலும் காணப்பட்டது. பல்வேறு வாகனங்கள் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தார்கள். மிகவும் குறுகிய சாலையில் இந்த பேருந்து பழுதாகி இடையில் நிறுத்தப்பட்டது. மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் காரில் இருந்து இறங்கிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் பழுதாகி நின்ற பேருந்தை மக்கள் தள்ளுவதை பார்த்து தானும் உதவி செய்வதாக கூறி பேருந்தை நகர்த்துவதற்கு உதவினார்.
இதை அங்கிருந்து நபர்கள் தன்னுடைய மொபைலில் வீடியோ எடுத்த இணையதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள். இந்த ஒரு காட்சி சமூக வலைத்தளங்களில் மிகவும் பயிரிடலாகி வருகிறது. குறிப்பாக மத்திய அமைச்சர் மக்களுடன் மக்களுக்காக இறங்கி வேலை செய்யும் பொழுது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்று பல்வேறு தரப்பினரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பேருந்து நகர்ந்த பின் கூட்ட நெரிசல் குறைந்தது பின்னர் அமைச்சர் அங்கு இருந்து தன்னுடைய காரில் புறப்பட்ட சென்றார்.
Input & Image courtesy: Polimer news