முதல் மந்திரியாக பிரதமராக 21 ஆண்டுகள் நிறைவு - மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து!

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முதல் மாதிரியாக மற்றும் பிரதமராக 21 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார்.

Update: 2022-10-09 03:15 GMT

குஜராத்தில் வேத்நகரில் பிறந்த பிரதமர் மோடி தனது எட்டாவது வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் நுழைந்த பொது வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து பாரதிய ஜனதாவில் இணைந்து கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றினார். இதன் மூலம் குஜராத் முதல் மந்திரி பதவி வரை அவரை தேடி வந்தது. அதன்படி குஜராத் முதல் அமைச்சராக கடந்த 2001 ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி முதல் முதல் முறையாக பதவியேற்றார். கடந்த 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து முதல் மந்திரியாக பதவியை அலங்கரித்து வந்தார்.


அதனைத் தொடர்ந்து 2014 நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாட்டின் பிரதமர் ஆனார். 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். இவர் இவ்வாறு இவர் அரசுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்று நேற்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு செய்து உள்ளார். இதனை BJP தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


அந்த வகையில் மத்திய மந்திரி பூபேந்திரன் யாதவ் தனது விட்ட பக்கத்தில், "21 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தேசத்தை நோக்கி தனது தன்னலமற்ற சேவையின் பயணத்தை பிரதமர் மோடி தொடங்கினார். 2001 ஆம் ஆண்டு குஜராத்தில் முதல் மந்திரியாக பொறுப்பு ஏற்றதிலிருந்து வலுவான மற்றும் நம்பிக்கை நம்பிக்கையான இந்தியாவை கட்டமைக்கும் ஆட்சியில் மோடி ஒரு முன்னுதாரணம் மாற்றத்தை கொண்டு வருகிறார்" என குறிப்பிட்டு இருக்கிறார். இவ்வாறு பல்வேறு தரப்பில் இருந்து மத்திய அமைச்சர்களும் மோடிக்கு புகழாரம் சூட்டி வருகிறார்கள்.

Input & Image courtesy: Dinamani News

Tags:    

Similar News