ரவுடி கும்பல் தலைவன் முகமது ஆசிப் சொத்துக்களை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கிய யோகி அரசு!
உத்தரபிரதேசத்தில் குற்றவாளிகளால் கட்டப்பட்ட சட்டவிரோத சொத்துக்களை புல்டோசர் மூலம் இடிக்கும் பணியை யோகி ஆதித்யநாத் அரசு மேற்கொண்டு வருகிறது. கான்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பிரபல கேங்க்ஸ்டர் முகமது ஆசிஃப் என்ற பப்பு ஸ்மார்ட்க்கு எதிராக இடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அவரது அனைத்து சட்டவிரோத சொத்துக்களையும் தரைமட்டமாக்கியது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய கும்பல்களில் ஆசிப் ஒருவர் என்றும், அவர் மீது கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன . கான்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன் சட்ட விரோதமாக ஆசிஃப் என்பவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது புல்டோசரை ஏவி இடித்து தள்ளியது.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், மார்ச் மாதம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு , குற்றவாளிகள் மீது சகிப்புத்தன்மை காட்டாமல் நடவடிக்கை எடுக்க மாநில நிர்வாகத்திற்கு முதலில் உத்தரவு பிறப்பித்தார் . குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்களுக்கு எதிராக அவர்களுடைய சொத்துக்களை புல்டோசர்களை கொண்டு அகற்றுமாறு ஏப்ரல் 8 ஆம் தேதி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
ஏழைகளின் சொத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையும் கடந்த 5 ஆண்டுகால யோகி அரசின் சிறப்பம்சமாகும்.