முதல் முறையாக விண்வெளிக்குச் சென்று உணவு டெலிவரி செய்யும் உபெர் ஈட்ஸ்.!
ஜப்பானிய பணக்காரர் ஒருவருக்காக விண்வெளிக்கே சென்று உணவு டெலிவரி செய்த உபெர் ஈட்ஸ் நிறுவனம்.
சமீபத்தில் ஜப்பானிய பேஷன் அதிபரான யுசாகு மேசாவாவுடன் இணைந்து Uber Eats நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு ஜப்பானிய பதப்படுத்தப்பட்ட உணவுகளை அனுப்பி வைத்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 12 நாள் பணிக்காக சோயுஸ் விண்கலத்தில் யுசாகு விண்வெளிக்குச் சென்றார். இந்த விண்கலத்துடன் சேர்ந்த நிறுவனத்தின் உணவு வகைகளும், நிறுவனத்தின் பைகளில் கொண்டு வரப்பட்டன.
அந்த பழுப்பு நிற பையில் கேனில் அடைத்து வைக்கப்பட்ட ஜப்பானிய உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. வரலாற்று சிறப்புமிக்க இந்த டெலிவரியின் வீடியோவை தற்பொழுது அமெரிக்க உணவு விநியோக சேவை நிறுவனமான உபெர் ஈட்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிரப்பட்டது. இந்த செய்தி தற்போது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதில் கோடீஸ்வரர் யூசாகு உபெர் ஈட்ஸ் டெலிவரி பையை எடுத்துக்கொண்டு போர்டல் வழியாக நுழைவதைக் காணலாம். யுசாகுவின் கையிலிருந்து பை மிதந்து வந்து விண்வெளி வீரரை அடைகிறது. மேலும் பையில் இருந்த உணவு கேன் வெளியே வருவதையும் வீடியோவில் காணலாம்.
இந்த வீடியோவை வெளியிட்டதோடு, விண்வெளி வீரர்களுக்கு அனுப்பப்பட்ட உணவுகள் குறித்தும் உபெர் ஈட்ஸ் நிறுவனம் தனது வீடியோவில் தெரிவித்துள்ளது. அதன்படி, விண்வெளி உணவுகள் என்று தலைப்பில் இந்த நிறுவனம் தற்போது நல்ல மார்க்கெட்டையும் பெற்றுள்ளது. விண்வெளி வீரர்களுக்கான நிலையான விண்வெளி உணவில் இருந்து இந்த உணவு ஒரு welcome break-ஆக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் பணம் இருந்தால் பாதாளம் வரை பாயும் என்ற நிலை மாறி தற்போது ஆகாயம் வரை செல்கிறது.
Input & Image courtesy: Timesnownews