'முஸ்லிம்கள் தெருவிற்கு வந்தால், அரசாங்கம் கட்டுப்படுத்த முடியாது': இஸ்லாமிய மதகுரு சர்ச்சைக் கருத்து!
முஸ்லீம்கள் தெருவுக்கு வந்தால், எந்த அரசாலும் எங்களை கட்டுப்படுத்த முடியாது.;
டெல்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள சாலைகளில் பல்வேறு இஸ்லாமிய மக்கள் சாலையை ஆக்கிரமித்து செய்த கடைகள் வீடுகள் போன்றவற்றை கட்டி உள்ளார்கள். மேலும் இதன் காரணமாக டெல்லி மாநகராட்சி இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து இருந்த கடைகள் மற்றும் வீடுகளை இடிப்பதற்கு உத்தரவுகளை பிறப்பித்தது. மேலும் இதற்குப் பின்னணியில் பா.ஜ.க அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கம் இருப்பதாகவும் இஸ்லாமியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் ஜஹாங்கிர்புரியில் மட்டும் அல்ல, அனைத்து டெல்லியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. இது வழக்கமான நடைமுறைதான். கோர்ட் அனுமதியோடுதான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன என்று மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான், டெல்லி மாநகராட்சியின் புல்டோசர் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருக்கிறார் இஸ்லாமிய மதகுரு. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர், இஸ்லாமிய மதகுரு மௌலானா தௌகிர் ராசா காங்கிரஸ் கட்சியை ஆதரித்து இவர்தான் முஸ்லீம்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் செய்தால், எந்த அரசாங்கமும் அடக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இத்திஹாத்-இ-மில்லத் கவுன்சில் கட்சியின் தலைவரான மௌலானா தௌகிர் கூறுகையில், "ரம்ஜான் பெருநாள் இன்னும் 10 நாட்களில் முடிந்து விடும். அதற்குள் அரசாங்கம் தனது செயற்பாடுகளை சீர்படுத்த வேண்டும். எந்த இடத்தில் குற்றம் நடந்தாலும், யாரேனும் குற்றம் சாட்டப்பட்டாலும் அந்த இடத்திலேயே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.
எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களில் வீடுகளின் மீது புல்டோசர் நடவடிக்கை எடுப்பது அநீதியான செயல் ஆகும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இஸ்லாமிய மதகுரு குறித்து சர்ச்சையான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் தயாராகிவருகிறது பல்வேறு முஸ்லிம்களை ஒன்று சேர்த்த அவர்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக இது அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. .
Input & image courtesy: News