இல்லாத நிலையிலும் கொரோனா தடுப்பூசி !இயக்கத்திற்கு பங்களிக்கும் பெண் டிரைவர் !

தன்னுடைய இல்லாத நிலையிலும் கூட கொரோனா தடுப்பூசி இயக்கத்திற்கும் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் டிரைவர்.

Update: 2021-09-16 14:49 GMT

அசாம் மாநிலத்தில் எலெக்ட்ரிக் ரிக்ஷா ஓட்டும் பெண் ஒருவர், மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் முயற்சியில் NGO ஒன்றுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். தன்மோனி போரா என்ற பெண் தினமும் காலை 9 மணிக்கு மேல் மருந்தகம் ஒன்றிற்கு ரிக்ஷாவை எடுத்து செல்கிறார். அங்கிருந்து குவகாத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிவாசிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தேவையான மருத்துவப் பொருட்களை தனது வாகனத்தில் ஏற்றி கொண்டு கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் தன்னால் முடிந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார். 


அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய ஆட்டோ ரிக்ஷா மூலம் மக்களை தடுப்பூசி போட்டு கொள்ள வீடுகளை விட்டு வெளியே வருமாறு அழைப்பு விடுக்கிறார். இதைப்பற்றி அவர் கூறுகையில், "இதுவரை நாங்கள் சுமார் 2,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளோம். தடுப்பூசி மையங்களுக்கு செயல் இயலாத நிலையில் இருந்த சுமார் 30 முதியவர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பு மருந்து செலுத்தி இருக்கிறோம். நாட்டில் தீவிரமாக நடைபெற்று வரும் தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக நாங்கள் இருப்பது எனக்கு பெருமை தருகிறது" என்றார். 


குறிப்பாக இவருடைய வீட்டு சூழ்நிலையில், கடும் நிதி நெருக்கடிகளுக்கு இடையே சுயமாக சம்பாதிக்க நினைத்து பல்வேறு போராட்டத்திற்கு பிறகு கடந்த 2019-ல் எலக்ட்ரிக் ரிக்ஷாவை வாங்கியதாக கூறி உள்ளார். கொரோனா லாக்டவுன் போது, குழந்தைகளின் கல்வி கட்டணம், ரிக்ஷா இன்ஸ்டால்மென்ட்ஸ், வீடு வாடகை உள்ளிட்ட பல நெருக்கடி இருந்ததாகவும் இவர் கூறியுள்ளார். இந்த ஒரு நிலையிலும்கூட, இவர் மற்றவர்களுக்கு உதவி செய்வது பலரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியுள்ளது. எனவே இவருடைய இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.  

Input & image courtesy:News18



Tags:    

Similar News