பறவைகள் சரணாலயத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியின் நிலை என்ன?

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் தற்போது புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளை துவங்கிய அரசு.;

Update: 2022-08-28 02:46 GMT
பறவைகள் சரணாலயத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியின் நிலை என்ன?

சென்னை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள வளாகத்தில் எந்த ஒரு விதமான முன்னறிவிப்பு இன்றி அனுமதியும் இன்றி புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் அங்கு உள்ள வனத்துறையினர் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவில் அமைந்துள்ளது தான் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இந்து சரணாலயம் சுமார் 300 ஆண்டு பாரம்பரியமிக்கது. நம்முடைய நாட்டில் மிகப் பழமையான பறவை சரணாலங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை அதிகமாக கவரும் வகையில் இங்கு 73 ஏக்கர் வேடன் தாங்கள் ஏரியை அடிப்படையாக வைத்து இந்த சரணாலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 60,000 பறவைகள் இங்கு வந்து செல்கின்றன.


இந்நிலையில் பறவைகள் சரணாலயத்தில் முகப்பு பகுதி வளாகத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள். அ.தி.மு க MLA தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இப்பணியை மேற்கொள்ளவும், அவர்கள் முடிவு செய்துள்ளார்கள் இதற்கான பூமி பூஜையும் நடந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த நிலத்தில் எந்த ஒரு அனுமதியும் பெறாமல், புதிய கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டும் பணி நடந்துள்ளது இப்போதைய கட்டுமானத்தால் சரணாலயத்தில் சூழ்நிலை பாதுகாக்கப்படும் என்ற நிலை எட்டி உள்ளது.


இதுகுறித்து பறவைகள் ஆர்வலர் கூறுகையில், "கடந்த வந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு, தற்போது இங்கு மீண்டும் புதிதாக பஸ் நிலைய பணிகளை அமைப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அ.தி.மு.க MLAவுக்கு விளம்பரம் தேடுவதற்காக, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் விதிகளை மீறி புதிய பஸ் நிலையம் அமைக்க முயற்சிக்கிறார்கள். இந்தப் பணியை வனத்துறை அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே தண்ணீர் வரத்து தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு கண்டு உள்ள நிலையில், புதிய பிரச்சனை கவலை அழிப்பதாகவும்" அவர்கள் கூறினார்கள்.

Input & Image courtesy:Dinamalar

Tags:    

Similar News