விபத்தில் கால்களை இழந்த நாய் ! மனிதர்களைப் போல் நடக்கும் தன்னம்பிக்கை வீடியோ !
விபத்தில் கால்களில் இழந்த நாய் ஒன்று மனிதர்களைப் போல நடக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகில் வாழும் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் ஒன்று நாய்கள். அவை மனிதனின் சிறந்த நண்பன் என்று அழைக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது இணையத்தில் நாய் ஒன்று தனது விடாமுயற்சியால் சாதித்த வீடியோ வைரலாகி வருகின்றது. கார் விபத்தில் காலை இழந்த பிறகு, ஒரு நாய் மனிதனைப் போல நிமிர்ந்து நடக்க கற்றுக்கொண்டது. நாயின் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. விபத்தில் காலை இழந்த நிலையில், நாய் செய்த செயல் அனைவருமே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆறு வயது நாய் டெக்ஸ்டர், கார் விபத்தில் சிக்கி தனது முன் காலை இழந்தது. காலை இழந்தவுடன் நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து நாய் பத்திரமாக குணமான பின்னரும் ஒரு கால் இல்லாத நிலையில் அதனால் நடக்க இயலவில்லை. நாயின் உரிமையாளர்கள் பலரும் நாய்க்கு எப்படி நடக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தனர். முதலில் நடக்க தடுமாறிய நாய் பின்னர் மனிதர்களை போல் எழுந்து நின்று இருகால்களை கொண்டு நடக்க ஆரம்பித்தது.
நாயின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் நாயின் தன்னம்பிக்கை செயலை வீடியோவாக இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதள மக்கள் மத்தியில் உலா வருகின்றது. நாயின் தன்னம்பிக்கை செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Input & Image courtesy:Timesnownews