தி.மு.க'வின் பிரச்சார பாடலுடன் காரில் மதுக்கோப்பையுடன் ஒன்றிய கவுன்சிலர் - வலம் வரும் வைரல் வீடியோ

ஓடும் காரில் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிறது.;

Update: 2022-09-24 14:04 GMT

ஓடும் காரில் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

ஓடும் காரில் ஒன்றிய கவுன்சிலர் விடியல் பாட்டை போட்டு மது கோப்பையுடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக உலா வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணா கிராமம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல கவரப்பட்டு பத்தாவது தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் குமரகுரு இவர் தனது நண்பர்களுடன் காரில் தி.மு.க கட்சி கொடி கட்டி பயணம் செய்யும்பொழுது கையில் இரு மது புட்டிகளை ஏந்தி ஆட்டம் போட்டார்.

இந்த காரில் ஆட்டம் போட்ட வீடியோ'வில் தி.மு.க'வின் கொள்கை பாடல் ஆன 'விடியல் பாடலை ஒலிக்கவிட்டு' மது அருந்தினர். பின்னர் சாலையோரம் காரை நிறுத்தி மது அருந்தி அவர்கள் அத்தனை பெறும் காருக்குள் மதுக்கோப்பையை ஏந்தியவாறு கார் ஓட்டிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக உலா வருகிறது.



Source - Polimer News

Similar News