டுவிட்டர் பதிவுகளை பார்க்க வேண்டுமா? இனி இந்த கட்டுப்பாடு நிச்சயம் - எலான் மஸ்க் அதிரடி

டுவிட்டர் பதிவுகளை பார்க்க எலான் மஸ்க் அதிரடியாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.;

Update: 2023-07-03 11:15 GMT

உலக பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அது முதல் ஊழியர்கள் குறைப்பு, புளூ டிக் பெற கட்டணம் என பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தேவையற்ற பதிவுகளை நீக்குவது, டுவிட்டரை கையாள்வது போன்றவற்றிற்காக தற்காலிகமாக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.


அதன்படி சரிபார்க்கப்பட்ட கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 10,000 பதிவுகளை பார்க்கலாம். சரி பார்க்கப்படாத கணக்குகள் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் பதிவுகளையும் அதில் புதிய கணக்கு எனில் 500 பதிவுகள் வரை மட்டுமே பார்க்க முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கம்ப்யூட்டரில் பதிவு செய்யாமல் பதிவுகளை பார்க்கும் வசதிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்கா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


SOURCE:DAILY THANTHI

Similar News