செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறதா? இல்லையா? நாசா வெளியிட்ட அறிக்கை!

செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பாக நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2022-01-28 14:23 GMT

இப்பொழுதும் மர்மங்கள் நிறைந்த மற்றும் புரியாத புதிராகவே செவ்வாய் கிரகத்தில் ஒவ்வொரு புகைப்படத்தின் வெளிப்பாடும் இருந்து வருகின்றது. மேலும் இதன் காரணமாக தற்பொழுது செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளதா? மனிதர்கள் அங்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என்பது தொடர்பாக நாசா பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றது. மேலும் ரெட் பிளானட் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு முக்கிய பகுதியாக கிரகத்தில் தண்ணீர் இருக்கின்றதா? அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 


அந்த வகையில் செவ்வாய் கிரகத்தின் தற்போதைய சாட்டிலைட் புகைப்படத்தில் மூலம் ஏற்கனவே அந்த கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், மேலும் அங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உயிர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்பொழுது அங்கு உள்ள தண்ணீர் சுமார் 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீராவியாக மாறி விட்டதாகவும் விஞ்ஞானிகள் தற்பொழுது கண்டுபிடித்துள்ளார்கள். மேலும் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்த நாசா விஞ்ஞானிகள் கூறுகையில் ஒரு கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது என்றால் அது மிகவும் நல்லது மேலும் அப்படி தண்ணீர் நீராவியாக மாறும் பொழுது அது விட்டுச் செல்லும்படி குளோரைடு உப்பு படிமம். 


எனவே அத்தகைய கூறுவது உப்பு படிமம் தற்போது செவ்வாய் கிரகத்தில் புகைப்படத்தில் காணப்படுகிறது. இதன் காரணமாக சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு ஏவப்பட்ட நாசாவின் மார்ஸ் ஒடிஸி ஆர்பிட்டர், 14 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக  உப்பு படிகங்களைக் கண்டறிந்தது. ஒடிஸியை விட அதிக தெளிவுத்திறன் கொண்ட கருவிகளைக் கொண்ட MRO, 2005 இல் தொடங்கப்பட்டதிலிருந்து உப்புகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்விலிருந்து கிரகத்தில் எப்பொழுது முதல் உயிர்கள் வாழத் தொடங்கியது? என்று கூட ஆராய்ச்சிகளும் நடந்து வருகிறது. 

Input & Image courtesy: News

Tags:    

Similar News