மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க வந்தால் பள்ளிகளில் பகவத் கீதை ஒலிக்கும்!

மேற்கு வங்காளத்தில் BJP ஆட்சிக்கு வந்த பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கப்படும் என சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.

Update: 2022-08-10 02:22 GMT

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகின்ற சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி பா.ஜ.க கொள்கைகளில் ஒன்றாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் இனி பகவத் கீதை கட்டாயம் கற்பிக்கப்படும் என்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் இது தான் இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தியை வெளியிட்டுள்ளது. மாவட்ட பா.ஜ.க சார்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் பகவத் கீதை புத்தக வினியோகம் செய்யப்பட்டது. 


இந்த நிகழ்வுக்கு முன்னதாக பள்ளிகளில் பகவத் கீதை போதிக்கும் திட்டத்தை குறித்து குஜராத் மாநில அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இது தொடர்பாக சுற்றி ஒன்றையும் அம்மாநில அரசு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கு வங்காளத்தில் இதனை முழுமையாக அமல்படுத்துவது குறித்து பாரதீய ஜனதா கட்சி தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் அந்த கட்சியின் தலைவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


கீதை ஒரு மதம் சார்ந்த நூல் மட்டுமல்லாது. குஜராத்தில் பள்ளி திட்டங்களில் கீதை சேர்க்கப்பட்டுள்ளது வங்காளத்தில் மக்கள் ஆசையுடன் தேசியவாத அரசு ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் கீதை கட்டாயப் ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் திரிணாமுல் காங்கிரஸில் முக்கிய நபராக சுவேந்து அதிகாரி இயங்கி வந்தார். கடந்த 2020 டிசம்பர் மாத பா.ஜ.கவில் இணைந்தார். 2021 மாநில சட்டமன்ற பேரவை தேர்தலில் நந்திகிராமில் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தோற்கடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy: BBC

Tags:    

Similar News