UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட 4 ஆண்டு இளங்கலைப் படிப்பு எப்படி அமையும்?
UGCஆல் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலைப் படிப்பு நான்கு வருடங்கள் எப்படி அமைய இருக்கும்?
தேசிய கல்விக் கொள்கையில் முன்மொழியப்பட்ட நான்காண்டு இளங்கலைப் படிப்பிற்கான (FYUP) பாடத்திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு(UGC) அனுமதித்துள்ளது. மத்தியப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மார்ச் 10ஆம் தேதி கூடி இந்தப் படிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார். எனவே இனிமேல் நான்கு ஆண்டுகள் இளநிலை பட்டப்படிப்பு அமையும். டெல்லி பல்கலைக்கழகம் 2022-23 கல்வியாண்டிலிருந்து புதிய வடிவத்தை ஏற்றுக்கொண்டது. தலா 90 நாட்கள் நீடிக்கும் எட்டு செமஸ்டர்களாகப் பிரிக்கப்படும் இந்தத் திட்டத்தை அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
நான்கு ஆண்டுகள் இளநிலை படிப்பில் மாணவர்கள் இத்தகைய படிப்பை மாணவர்கள் மேற்கொள்வார்கள். இதோ விளக்கம், 1, 2 மற்றும் 3 செமஸ்டர்களில், மாணவர் மனிதநேயம், சமூக அறிவியல், கணிதம் மற்றும் தொழிற்கல்வி ஆகிய பாடங்களை படிப்பார். செமஸ்டர் 3 முடிவில், மாணவர் பட்டத்திற்கான முக்கிய மற்றும் சிறிய பாடத்தை முடிவு செய்வார்கள். இது ஆர்வம் மற்றும் கல்வித் திறனின் அடிப்படையில் ஒதுக்கப்படும். 7 மற்றும் 8 செமஸ்டர்களில், மாணவர் சிறப்புப் பாடத்தில் ஆராய்ச்சி அடிப்படையிலான படிப்பை மேற் கொள்வார்.
மேலும் நான்கு ஆண்டுகளில் மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேறும் போது பல்வேறு நிலைகளையும் பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்துள்ளது. பல நுழைவு-வெளியேறும் விருப்பங்களுடன், முதலாம் ஆண்டுக்குப் பிறகு வெளியேற விரும்பும் மாணவர்களுக்குச் சான்றிதழும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறுபவர்களுக்கு டிப்ளமோவும், மூன்று ஆண்டுகள் முடிக்கும் மாணவர்களுக்கு இளங்கலைப் பட்டமும், நான்கு ஆண்டுகள் படிப்பவர்களுக்குப் பட்டமும் வழங்கப்படும்.
Input & Image courtesy: The print News