வாட்ஸ் ஆப் தனிமனித உரிமைகளை மீறியதால் ரூ.1950 கோடி அபராதம் !

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு தனி மனித உரிமைகளை மீறிய குற்றத்திற்காக நெதர்லாந்து நாடு சுமார் ரூ.1950 கோடியை அவர் அபராதமாக விதித்துள்ளது.

Update: 2021-09-03 13:48 GMT

குறிப்பாக உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களும் குறிப்பாக சமூக வலைத் தளங்களிலும், வாட்ஸ் அப்களிலும் தங்களுடைய நேசத்தை அதிகமாக செலவு செய்கிறார்கள். குறிப்பாக எல்லா விஷயங்களையும் வாட்ஸ்அப் மூலமாக நாம் பிறருக்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம். இதன் மூலமாக நம்முடைய சில தனிப்பட்ட தகவல்கள் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக நம்முடைய தனிப்பட்ட விவரங்களை அந்நிறுவனம் பிற நிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  


ஏற்கனவே வாட்ஸ் ஆப் நிறுவனத்தை கடந்த 2014ல் பேஸ்புக் நிறுவனம் வாங்கி உள்ளது. இந்நிலையில், ‛வாட்ஸ் ஆப்' செயலி தனது பயனர்களின் விவரங்களை பேஸ்புக் நிறுவனத்தின் பிற செயலிகளுடன் பகிர்ந்துகொள்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு சுமார் 50 மில்லியன் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும் இந்த அபராதம் மிகவும் குறைவாக இருப்பதாக ஐரோப்பிய ஒழுங்குமுறையாளர்கள் தெரிவித்தனர். 


இதன் காரணமாக தற்பொழுது அயர்லாந்து நாட்டின் தகவல் பாதுகாப்பு ஆணையம் (DPC) இந்த அபராதத் தொகையை அதிகரித்துள்ளது. பல காரணங்களின் அடிப்படையில், 225 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்படுவதாகவும் DPC தெரிவித்துள்ளது. இது குறிப்பாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.1950 கோடி ஆகும். இந்த அபராதம் மிகவும் அதிகமானது என்றும் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.  

Input:https://www.bbc.com/news/technology-58422465

Image courtesy:BBC News


Tags:    

Similar News