அதிக நன்கொடையை வழங்கியதாக கொண்டாடப்படும் ஷிவ் நாடார் - பின்னணி என்ன?

2022 ஆம் ஆண்டில் அதிக அளவில் நன்கொடை வழங்கியவர் ஷிவ் நாடார்.

Update: 2022-10-21 12:48 GMT

இந்தியாவை சேர்ந்த அமைப்பு உலகப் பணக்காரர்கள் பட்டியல், இந்திய நன்கொடையாளர்கள் பட்டியல் போன்றவற்றை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில் இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் சிறந்த நன்கொடையாளராக HCL நிறுவனர் ஷிவ் நாடார் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.


இவர் ஓராண்டில் சுமார் 1,161 கோடியை நன்கொடையாக வழங்கி இருக்கிறார். இதில் பெரும்பாலான தொகை கல்விக்காக வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசின் பிரைம்சி பெற்று இருக்கிறார். இவர் 484 கோடி நன்கொடை வழங்கி இருக்கிறார். மூன்றாவது ஆக முகேஷ் அம்பானி 411 கோடி வழங்கி மூன்றாம் இடத்திலும், குமார் மங்கலம் பிர்லா குடும்பத்தினர் 242 கோடி வழங்கிய நான்காம் இடத்தில் உள்ளனர்.


ஆதித்யா குடும்பத்தை சேர்ந்த சுஷ்மிகா பாக்சி மற்றும் மிரண்டா நிறுவனத்தில் சாரதா ஆகியோர் 213 கோடியை வழங்கியிருக்கிறார்கள். கௌதம் அதானி 190 கோடி வழங்கி ஏழாவது இடத்தில் இருக்கிறார். இவர் அதிகமாக பேரிடர் நிவாரணத்திற்கு நன்கொடை வழங்கி இருக்கிறார். வேதாந்த நிறுவனத்தின் அணில் அகர்வால் 165 கோடி வழங்கி எட்டாவது இடத்திலும், இன்போசிஸ் நிறுவனத்தின் நந்தன் நிலோக்கனி 159 கோடி வழங்கி 9 வது இடத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக கல்விக்காக அதிகமாக நன்கொடையும் வழங்கி இருக்கிறார்கள்.

Input & Image courtesy:News 18

Tags:    

Similar News