முதல் கடற்கரை அதுவும் உலகளவில் இந்தியாவில் தான் உள்ளதா? ஆனந்த் மகேந்திரா கருத்து !
உலகின் முதல் கடற்கரை இந்தியாவில்தான் அமைந்துள்ளதா?
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபராக மகேந்திராவின் நிறுவனரான ஆனந்த் மகேந்திரா அவர்கள் விளங்குவார். இவர் சமூக வலைதளங்களில் மட்டுமல்லாது, சுற்றுச்சூழல்-சுற்றுலா மேம்பாட்டிற்காக பாடுபடும் ஒரு நபராகவும் இருப்பார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் உண்மைதான். ஆனந்த் மஹிந்திரா 'உலகின் முதல் கடற்கரை' ஜார்க்கண்டின் சிங்பூம் பகுதியில் இருக்கக்கூடும் என்று சமீபத்திய கண்டுபிடிப்புகள் கண்டறிந்து உள்ளது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது போல், "கண்டங்கள் முன்பு நினைத்ததை விட சுமார் 700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பெருங்கடல்களில் இருந்து தோன்றியதாகவும் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன" என்றும் அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
சுற்றுலா மற்றும் இயற்கை ஆர்வலர் என்று அறியப்படும் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, "உலகளாவிய சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்க இது உதவியாக இருக்கும்" என்று குறிப்பிட்டு, சமூக வலை தளத்தின் படத்தைப் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இப்பகுதியில் சுற்றுச்சூழல்-சுற்றுலா மேம்பாட்டிற்காக பாடுபடும் தொழிலதிபர், "பழங்குடியின சமூகங்களின் உரிமைகளை நசுக்கக்கூடாது" என்று வலியுறுத்தினார்.
இந்த நீர்நிலைகள் அனைத்தும் கண்ட நிலமாக இருந்திருந்தால் மட்டுமே இருந்திருக்கும். 3.1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிங்பூம் பகுதி கடல் மட்டத்திற்கு மேல் இருந்தது என்று அவர்கள் பின்னர் கண்டறிந்தனர். மேலும் கிழக்கு இந்தியாவில் உள்ள சிங்பூம் கிராட்டன் ஆரம்பத்தில் சுமார் 3.3 பில்லியன் முதல் 3.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல்களுக்கு மேலே உயர்ந்து. இப்பகுதியை பூமியின் மிகவும் பழமையான கடற்கரைகளில் ஒன்றாக மாற்றி உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
Input & Image courtesy: Livemint