தவறான வரைபடம்.. ட்விட்டர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

தவறான வரைபடம்.. ட்விட்டர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

Update: 2020-11-13 08:41 GMT

லடாக் யூனியன் பிரதேசத்துக்குள் இருக்க வேண்டிய லே பகுதியை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச வரைபடத்தில் இடம்பெறச் செயத சர்ச்சைக்குரிய விவகாரத்துக்கு தீர்வு காண வரும் நவம்பர் இறுதிவரை அவகாசம் வழங்குமாறு ட்விட்டர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளதாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில் தகவல் வெளியாகியுள்ளது. 

இது பற்றி ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள நோட்டீஸில், ட்விட்டர் நிறுவன நடவடிக்கை, இந்திய நாடாளுமன்ற இறையாண்மையை களங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஏன் கருதக்கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் 5 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு ட்விட்டர் நிறுவன துணைத் தலைவருக்கு அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான வரைப்படத்தை காண்பிக்கும் விவகாரத்தில் உரிய பதில் அளிக்காவிட்டால் உங்கள் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கையை ஏன் எடுக்கக்கூடாது என்றும் அந்த நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது பற்றி மின்னஞ்சல் செய்திக்குறிப்பில் இந்திய அரசுக்கு அனுப்பிய பதில் குறித்து ட்விட்டர் நிறுவன செய்தித்தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில், மக்கள் உரையாடல் தொடர்பான சேவையை வழங்குவதில் இந்திய அரசு, இந்திய மின்னணு, தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளும் பணியில் ட்விட்டர் நிறுவனம் காட்டும் ஈடுபாடு தொடர்ந்து இருக்கும். இந்திய அரசு அனுப்பியுள்ள நோட்டீஸீக்கு உரிய பதிலை தெரிவித்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.
 

Similar News