நாய்க்குட்டி பிறந்த நாளிற்காக 11 லட்சம் செலவு செய்த இளம்பெண்: போலீஸ் எடுத்த நடவடிக்கை!

சீனாவைச் சேர்ந்த பெண் தன்னுடைய நாய்க்குட்டியின் பிறந்த நாளிற்காக 11 லட்சம் செலவு செய்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

Update: 2022-01-10 14:02 GMT

உலகிலுள்ள பலர் தங்களுடைய செல்லப்பிராணிகளாக நாய்க்குட்டியை தேர்ந்தெடுத்து வளர்க்கிறார்கள். பெரும்பாலும் தன்னுடைய தனிமையை போக்குவதற்கு உதவியாகவும், தன்னுடைய குடும்பத்தில் ஒருவராகவும் அவற்றை பிரியமாக வளர்ப்பார்கள். மேலும்  அதனுடைய உணவிற்காக நிறைய செலவுகளை செய்பவர்களை நாம் பார்த்து இருக்கிறோம். வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அப்போது வைரலாகும். ஆனால் தற்பொழுது செல்ல நாய்க்குட்டியின் பிறந்த நாளிற்காக இந்திய மதிப்பில் 11 லட்சம் செலவு செய்த இளம்பெண் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அந்த வகையில் தற்போது மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட பெண் தனது நாயின் பிறந்தநாளை கொண்டாட, கிட்டத்தட்ட 1,00,000 யுவான் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 11 லட்சம் பணத்தை ட்ரோன்களுக்காக செலவழித்துள்ளார். செல்லப்பிராணி பிரியரான அந்த பெண் ட்ரோன்களை பயன்படுத்தி நாயின் பிறந்தநாளை ட்ரோன் லைட் ஷோ மூலம் கொண்டாட 100,000 யுவான் பணத்தை செலவழித்து உள்ளார்.  


குறிப்பாக இந்த ட்ரோன் சோவிற்காக மட்டும் சுமார் 520 ட்ரோன்களை வாடகைக்கு எடுத்துள்ளார். மேலும் நாய்க்குட்டியின் பிறந்த நாளிற்காக ஆற்றின் அருகில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் அங்குள்ள சட்டத்தின்படி ஆற்றின் அருகில் ட்ரோன்களை பறக்க விடுவது சட்டப்படி குற்றமாகும். இதன்மூலம் இவர் அங்குள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது வழக்குப்பதிவு பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy: News 18




Tags:    

Similar News