சர்ச்சுகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் கடவுளுக்கு தெரியாது - பதிலளித்த வாட்டிகன்!

Update: 2021-03-21 08:10 GMT

சர்ச்சுகளில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. இது பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது சர்ச்சுகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் பற்றி தங்களின் கடவுளுக்கு தெரியாது என்று வாடிகன் தெரிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


கடந்த 60 ஆண்டுகளில் மட்டும் சர்ச்சுகளில் 4392 கத்தோலிக்க பாதிரியார்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த பாலியல் குற்றங்கள் பற்றி கடவுளுக்கு தெரியாது என்பதுதான் வாட்டிகன் கொடுத்திருக்கும் பதில். கடந்த 2005ஆம் ஆண்டு கத்தோலிக்க சர்ச் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடிதம் ஒன்று வெளியாகியது. அந்த கடிதத்தில் குழந்தைகளிடம் பாலியல் வக்கிரத்தை காட்டும் பாதிரியார்களை Pedeophile Priest என்று குறிப்பிட்டிருப்பார்கள்.

அப்படியான பாதிரியார்கள் கத்தோலிக்க தேவாலயத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது கத்தோலிக்க உயர் அதிகாரிகளுக்கும் தெரியும் கத்தோலிக்க மத‌ கடவுளுக்கும் தெரியும் என்று அந்த கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு இது தொடர்பான குற்றச்சாட்டுக்கு இந்த கடிதம் மூலம் புகார் அளிக்கப்பட்டதற்கு தற்போது தான் வாடிகன் பதிலளித்துள்ளது.

வாடிகனின் செய்தி தொடர்பாளர் Fr.பெட்ரிகோ இதற்கு அளித்த பதில் தான் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவர் இந்த கடிதம் தொடர்பாக பதிலளிக்கையில் தனக்கு இந்த கடிதத்தைப் பற்றி இப்போது தான் தெரிய வந்தது என்று தெரிவித்தார். மேலும் கடிதத்தை படிக்கும் பொது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற இந்த பாலியல் குற்றங்களை பற்றி கடவுளுக்கு அதாவது "இயேசு கிறிஸ்து"வுக்கு தெரியாது என்று தெரிவித்தார்.

"1950 முதல் 1985 வரை பாதிரியார்கள் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது" என்று கடவுள் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாதிரியார்கள் பற்றி கடவுளுக்கு எப்படி தெரியாமல் போகும் என்று கேட்டதற்கு இவர் அளித்த பதில் அனைவரையும் வாயடைத்துப் போகச் செய்துள்ளது.



சொர்க்கத்தில் நிலைமை தற்போது மோசமாக இருப்பதாகவும் அதனை சீர் செய்யும் நடவடிக்கையில் கடவுள் ஈடுபட்டு கொண்டிருப்பதாகவும் அதனால் இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி கடவுளுக்கு தெரியவில்லை என்றும் அவர் பதிலளித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் கடவுள் 'மின்னலாக' செயல்பட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கடவுளிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் கடவுள் மீது யாரும் குற்றச்சாட்டுகள் கூறக் கூடாது அவ்வாறு நீங்கள் கடவுள் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்தால் கடவுளிடம் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் நமக்கு வரும் சில ஆண்டுகள் மிகவும் இக்கட்டான ஆண்டுகளாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ மதத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கடவுள் பெயரை கூறிக்கொண்டு பல்வேறு பாலியல் துன்பங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து கேட்பவர்களுக்கு இயேசுவின் பெயரையே கொண்டு சர்ச் நிர்வாக மிரட்டி வருகிறது.

இவ்வளவு ஆண்டுகள் மக்களிடம் மூட நம்பிக்கையை பரப்பி தங்களின் மதத்தை மற்றவர்களிடம் பரப்பி வந்த கத்தோலிக்க சர்ச் நிர்வாகம் இனிமேல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட முடியாது. எனவே சர்சுகளில் நடைபெற்ற அனைத்து பாலியல் குற்றச்சாட்டுகளையும் முறையாக விசாரித்து குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் மேலும் பாதிரியார்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அமைத்து தர வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Similar News