பெண்களை இழிவாக பேசுவது தி.மு.கவின் மரபுகளில் கலந்த ஒன்று - ஒரு வரலாற்று பார்வை!

Update: 2021-03-28 06:30 GMT

திராவிட முன்னேற்ற கழகம் சி.என்.அண்ணாதுரை துவக்கி இன்றைக்கு தமிழக அரசியல் களத்தில் முக்கியமாக வேரூன்றி நிற்கும் ஓர் இயக்கம். இதன் சுவடுகளை பார்த்தால் பல சம்பவங்கள் தெரியும் குறிப்பாக இவர்கள் பெண்களை அதிலும் பெண் முன்னேற்றத்தை பற்றி நீட்டி முழங்கிவிட்டு பின்னர் பெண்களை பற்றி இழிவாக பேசும் வரலாற்றை திரும்பி பார்த்தால் அதில் சிலவற்றை அச்சில் ஏற்ற இயலாது, சிலவற்றை மக்கள் கேட்டால் மறந்தும் கூட தி.மு.கவிற்கு பெண்கள் வாக்களிக்க மாட்டார்கள் அப்படிப்பட்டது பெண்களை பற்றிய தி.மு.கவின் பேச்சும் மூன்றாம் தர வார்த்தைகளும்.

இது சி.என்.அண்ணாதுரை மட்டுமல்ல அவரை தொடர்ந்து வந்த மு.கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் கழக பேச்சாளர்கள், கழக இரண்டாம் கட்ட தலைவர்கள் என தி.மு.கவில் பெண்கள் பற்றி இழிவாக பேசாதவர்களை விரல் விட்டு எண்ணிணாலும் அவை ஒற்றை இலக்கத்திலேயே முடியும். அவற்றை எல்லாம் எழுதவேண்டும் என்றால் பல பக்கங்கள் தாண்டும் அவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே மேற்கோள் காட்டியிருக்கிறோம்.

சி.என்.அண்ணாதுரை ஈ.வே.ராமசாமியின் மீது கொண்ட கோபத்தால் தனியாக திராவிட முன்னேற கழகத்தை துவக்கினார். மேடைப்பேச்சு, படிப்பு, எழுத்து என தன் திறமைகளால் ஆட்சியில் ஜொலித்த அண்ணாதுரை மீது ஒரு விமர்சனம் வந்தது. அது ஒரு நடிகையுடன் அவரை தொடர்புபடுத்தி, அரசியல்வாதிகள் மற்றும் நடிகைகளின் மீது விமர்சனம் வருவது இயல்பானதுதான்.

ஆனால் அதனை ஓர் முதல்வர், ஒரு கட்சியின் பொதுச்செயலாளர், சமுதாயம் மதிக்கும் ஓரு பேச்சாளர் நாசுக்காக மறுத்து பேசியிருக்கலாம், இல்லை எனில் ஒதுங்கி இருக்கலாம் அதற்கு சி.என்.அண்ணாதுரை கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா? "நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல. அவள் படிதாண்டா பத்தினியுமல்ல" என்று, ஓர் சம்பவத்தை அதிலும் பெண் சம்மந்தப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை பற்றி பொதுவில் கேட்கும் போது ஒரு தலைவர் கூறும் வார்த்தையை பாருங்கள்? இவருக்கு "பேரறிஞர்" என தி.மு.கவினர் மத்தியில் பெயர் வேறு எவ்வளவு கேவலம் என்று பார்த்தீர்களா?

அடுத்தது கருணாநிதி, இவர் பற்றி அதிலும் குறிப்பாக இவர் பெண்களை பற்றி பேசியதை எழுத நாள் போதாது ஆனால் இரண்டு முக்கிய சம்பவம் உள்ளது. ஒன்று மதுரையில் தி.மு.கவினர் நடத்திய போராட்டத்தில் இந்திரா காந்தி அம்மையாருக்கு தலையில் அடிப்படு இரத்தம் வந்தது, அதற்கு முத்தமிழறிஞர் என ஆசையாய் உடன்பிறப்புகளால் அழைக்கப்படும் தி.மு.கவின் கருணாநிதி கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா? "அம்மையாருக்கு மாதவிலக்காய் இருந்திருக்கும்" என என்ன ஒரு வக்கிரவாதி இந்த தி.மு.க தலைவர் கருணாநிதி பார்த்தீர்களா?

மற்றுமொரு சம்பவத்தில் தமிழக சட்டமன்றத்தில் "எங்கே இருக்கிறது திராவிட நாடு" என்று காங்கிரஸ் பெண் எம்.ல்.ஏ. அனந்தநாயகி கேட்டபோது, அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி அளித்த பதில், "நாடாவை அவிழ்த்து, பாவாடை தூக்கினால் திராவிட நாடு தெரியும்" என மூன்றாம் தரமாக சட்டசபை என்றும் பாராமல் பேசினார். பின்னர் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கூச்சல் குழப்பத்திற்கு பிறகு கருணாநிதி தந்த விளக்கம் "நாடாவால் கட்டி வைக்கப்பட்டுள்ள நூலை அவிழ்த்து, பக்கங்களை புரட்டிப் பார்த்தால் திராவிட நாடு தெரியும்" என சமாளித்தார்.

கருணாநிதியை தொடர்ந்து வெற்றி கொண்டான் தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவை "இனி குழந்த பெறுவது சாத்தியமா? இதை முன்னரே கேட்டால் கூட முயற்சி செய்திருப்பேன்" எனவும், "அவர்களுக்கு பல பாஷை தெரியும் ஏனெனில் தொழில் அப்படி" எனவும் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்தது அனைவரும் அறிவர்.

பின்னர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி "சசிகலாவின் காலுக்கடியில் ஊர்ந்து பதவியை பிடித்தவர் எடப்பாடி" என ஆபாசமாக பேசியது, தீவிர தி.மு.க ஆதரவாளர் கவிஞர் வைரமுத்து ஆண்டாளை இழிவாக பேசியது, கூட்டணி கட்சியான திருமாவளவன் "இந்து பெண்களை விபச்சாரிகள்" என இழிவாக பேசியது போன்றவை வரலாற்று சுவடுகள்.

இப்படி பெண்கள் என்றால் தி.மு.க'வினருக்கு போகப்பொருள், பிரச்சாரத்தை சுவாரஸ்யமாக மாற்றவும், மூன்றாம் தர பேச்சால் கை தட்டல் வாங்கவும் தேவைப்படும் ஓர் பேசுபொருள் என்றே தி.மு.க'வினர் கருதுகின்றனர்.

இவற்றையெல்லாம் தொடர்ந்து தற்பொழுது பிரச்சாரத்தில் கூட தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பெண்களின் இடுப்பை கேவலாம பேசுகிறார், தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எடப்பாடியாரின் தாயாரை பற்றி கேவலமாக பேசுவதும் தி.மு.க'வினர் மரபில் கலந்தது. இப்படி பெண்களை பற்றி இழிவாக பேசுவது மரபில் கலந்தமையால் தி.மு.க'வினரையும் மூன்றாம் தர பேச்சையும் பிரிக்க இயலாது.

"தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும்"

ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரை அரியணை அமர வைப்பது பின்வரும் தலைமுறையிலும் நீங்காத துன்பத்தை தரும் என்பதே குறள் ஆகும். வாக்களிப்பதற்கு முன் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய குறள் அது.

Similar News