சீன - நேபாள உறவில் விழும் விரிசல்! எல்லை மீறிப் போகிறதா சீனா?

Update: 2021-03-17 10:39 GMT
சீன - நேபாள உறவில் விழும் விரிசல்! எல்லை மீறிப் போகிறதா சீனா?

சீன மற்றும் நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே எந்தவித பிரச்சனைகளும், சிக்கல்களும் இல்லாத ஒற்றுமையான உறவு பெரும்பாலும் இருந்தாலும் நேபாள வர்த்தகர்கள் சீன நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுகிறார்கள்.

சீனாவிற்கு எதிராக நேபாள வர்த்தகர்கள் சீன-நேபாள நாட்டின் எல்லையில் உள்ள மிக முக்கியமான இரண்டு வர்த்தக வழிகளான "ரசுவகதி மற்றும் டடோபனி" இடங்களில் உள்ள சோதனைச் சாவடியில் எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளனர்.

இறக்குமதி செய்ய வேண்டிய பொருட்கள் உள்ள லாரிகளை எல்லையை கடக்க விடாத சீனா அதிகாரப்பூர்வமில்லாத முற்றுகை (blockade) செய்வதாக நேபாள நாட்டு வர்த்தகர்கள் குற்றம் தெரிவித்து உள்ளனர்.

நேபாள மற்றும் சீன எல்லையில் சீன நாட்டின் வர்த்தகத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்யும் நேபாள நாட்டின் வர்த்தகர்கள், சர்வதேச வர்த்தக சட்டங்கள் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களுக்கு கட்டுப்படவும், போராட்டங்களின் போது சீன நாட்டில் இருந்து நேபாளத்திற்கு வரும் பொருட்கள் தடங்கல் இல்லாமல் வருவதை உறுதி செய்யவும் சீனாவிடம் வலியுறுத்தினர்.

மேலும் அவர்கள் அறிவிக்கப்படாத முற்றுகையை (blockade) முடிவுக்கு கொண்டு வர சீனா முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்டார்கள். ஆனால், நேபாள வர்த்தகர்களை சிரமப்படுத்த, சீனப் போக்குவரத்து துறையினர் சீன எல்லைக்கும் நேபாள எல்லைக்கும் இடையில் கிட்டத்தட்ட 26 கி.மீ.-க்கு சரக்குக் கட்டணங்களை 15,000-16,000 லிருந்து 60,500 -65,000 வரை உயர்த்தி உள்ளனர்.

இந்த பிரச்சினைகள் குறித்து நேபாள வர்த்தகர்கள் சீன அதிகாரிகளுடன் பேசியுள்ளனர், ஆனால் எந்தவிதமான சாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை.

தற்போது, ​​நேபாளம் மற்றும் சீனா இடையே ஹில்சா, நாக்சா, கோ ராலா, கோர்கா லர்கா , ரசுவகதி, டடோபனி, லாமாபகர், கிமதங்கா, மற்றும் ஓலாங்சுங் கோலா உள்ளிட்ட ஒன்பது வர்த்தக வழிகள் உள்ளன; அவற்றில் ரசுவகதி மற்றும் டடோபனி ஆகியவை மிக முக்கியமானவை. இந்த இரண்டு முக்கியமான எல்லைப் புள்ளிகளும் ஜனவரி 2020 முதல் கரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளன .

தொழிலதிபர்களின் உணர்வுகளை எதிர் ஒலிக்கும் வகையில், நேபாள நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா அமைச்சரவையில் உள்ள தற்போதைய கைத்தொழில், வர்த்தகம் மற்றும் விநியோகத் துறை அமைச்சர் லெக் ராஜ் பட்டர், நேபாளமுடனான வர்த்தகத்தில் சீன நாட்டின் நடத்தை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

நேபாளத்துடனான வர்த்தகத்தை தடுத்ததால் சீனாவை அவர் கண்டித்தார். மீண்டும் சீனாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றால் நேபாளம் நன்கு சிந்தித்தே முடிவு எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 1 ,1955 - இல் நேபாள நாட்டிற்கும் சீனா நாட்டிற்கும் இடையில் அரசியல் ரீதியாக உறவுகள் ஏற்பட்டதில் இருந்து, நேபாளத்தில் எந்தவொரு அரசாங்க அமைப்பும் சீனாவிற்கு எதிராக பேசக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பமும் ஏற்பட்டது இல்லை, இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் வெவ்வேறு ஏற்றத் தாழ்வுகளும் சிக்கல்களும் ஏற்பட்டு உள்ளன.

அக்டோபர் மாதம் மற்றும் நவம்பர் மாத பண்டிகை காலங்களில் உடைகள், காலணிகள், அழகுசாதனப் பொருட்கள், மின் அணுவியல், தொழில் துறை மூலப்பொருள்கள் என 2,000 சரக்குகளை நேபாள நாட்டிற்குள் செல்வதை கொரானா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் சீன அரசாங்கம் தடுத்து உள்ளது.

இச்செயல் நேபாளத்தில் மீதான சீன நாட்டின் அதிருப்தியை காட்டுகிறது. மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் நேபாள நாட்டைச் சேர்ந்த வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை சீன நாட்டின் வர்த்தகத் துறையை சேர்ந்த அதிகாரிகள் சிறிதளவும் யோசிக்கவில்லை என்பது புலப்படுகிறது.

நேபாள தேசிய வர்த்தகர்கள் கூட்டத்தின் தலைவரான நரேஷ் கட்டுவால், "இந்த ஆண்டு புதிய கோடைகால பொருட்களை இறக்குமதி செய்ய நேபாள வர்த்தகர்களுக்கு சீன அதிகாரிகள் விசா வழங்குவதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. அதனால், சீன நுகர்வோர் பொருட்களை நில வழித்தடங்கள் மூலம் இறக்குமதி செய்யும் பல தொழிலதிபர்கள் கொல்கத்தாவில் உள்ளதால், இந்திய துறைமுகம் வழியாக தங்கள் பொருட்களை மாற்று வழியில் கொண்டு வருவதை தவிர வேறு வழி இல்லை" என்று அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த மாற்று பாதையை தற்போது 70 சதவீதம் நேபாள வர்த்தகர்கள் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இது நீண்ட வழி பாதை என்பதால் அவர்களுக்கு போக்குவரத்து செலவுகள் 1.2 மில்லியன் டாலர் என்று பெரும் அளவில் அதிகரித்து உள்ளது.

முன்னதாக, சீனாவுடனான வடக்கு நில எல்லை வழியாக லாரிகள் நேபாளத்தை அடைய இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகும், ஆனால் இப்போது இந்திய துறைமுகங்கள் வழியாக இறக்குமதி செய்யும்போது சீன பொருட்கள் நேபாளத்தை அடைய கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிறது. எல்லையை மூடுவது வர்த்தகர்களுக்கு மட்டுமல்ல, அரசாங்கத்திற்கும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளம் தனது வருடாந்திர தொகையான 11 பில்லியனில், ராசுவகடி சுங்கச்சாவடியை மூடியதால் 400 மில்லியன் மற்றும் டடோபனி உலகத்தை மூடியதால் 5.8 பில்லியன் தொகையையும் இழந்துள்ளது.

நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறவில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நன்றாக இருந்தபோதிலும் நேபாள வணிகர்கள் வர்த்தகத்தால் பாதிக்கப்படுகிறார்கள். நேபாள வர்த்தகர்கள் சீன வர்த்தக திட்டத்தால் பாதிக்கப்படுவது எப்படி என்று தெரியவில்லை.நேபாளம் "ஒரு சீனா" என்னும் கொள்கையை பின்பற்றுகிறது, மேலும் மாவோயிஸ்ட் தலைவர் புஷ்பா கமல் தஹால் 2017 இல் நேபாள பிரதமராக இருந்தபோது சீனாவின் சாலை முன்முயற்சியில் கை எழுதிட்டார்.

2016 - ஆம் ஆண்டில், சீனா நேபாளத்தை தனது மூன்று துறைமுகங்களுக்கு அணுக அனுமதித்தது (லான்ஷோ, லாசா, மற்றும் ஜிகாட்சே ). ஆனால், சீனாவில் உள்ள தியான்ஜின் , ஷென்ஜென் , லியான்யுங்காங் மற்றும் ஜான்ஜியாங் உள்ளிட்ட நான்கு துறைமுகங்களை அணுக அனுமதிக்க வில்லை.

அதன் பிறகு சீனா, நேபாளத்தில் அந்நிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய ஆதாரமாக உருவெடுத்தது. சீனாவிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிவேகமாக அதிகரிக்க தொடங்கியது. 2003 -இல் நேபாளத்திற்கு வருகை தந்த சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7,562 மட்டுமே, ஆனால் அது 2019- இல் 169,543 ஆக உயர்ந்தது. இவ்வாறு நேபாள சுற்றுலா பயணிகள் சீனாவிற்கு செல்வதன் மூலம் லாபம் அடைவது சீனாவே. இதனால், நேபாளத்தை விட சீனாவுக்கு வர்த்தகம் சாதகமானது. நேபாளத்தின் மொத்த ஏற்றுமதியில் சீனாவின் பங்கு 1.2 சதவீதம் மட்டுமே. ஆனால் நேபாளத்தின் மொத்த வர்த்தகத்தில் அதன் பங்கு 15 சதவீதத்தை தாண்டியது. இதன் மூலம் சீனா நேபாளத்தின் நன்கு லாபம் அடைகின்றது என்பதும் நேபாளம் சீனாவினால் சிறிதளவே லாபம் பெறுகிறது என்பதும் நன்றாக தெரிய வருகிறது

சமீபத்திய ஆண்டுகளில், நேபாளத்துக்கும் சீனாவிற்கும் இடையே விலங்கு பொருட்கள், தங்கம் மற்றும் சிவப்பு சந்தனம் போன்ற அங்கீகாரம் பெற்றாத பொருட்களின் கடத்தல் காணப்படுகிறது. மேலும், சைபர் கிரைம்கள், வங்கி மோசடி மற்றும் மனித கடத்தல் ஆகியவை நடப்பது கவலைக்குரியது. நேபாளம் - சீனா எல்லையை ஒரு வருடத்திற்கும் மேலாக சீன அதிகாரிகள் மூடியது நேபாளர்களுக்கு பெரும் சிரமங்களை உருவாக்கியுள்ளது. அவர்களின் இந்த சிரமத்தை சீன அதிகாரிகள் அறியாமல் மற்றும் அந்த சீன அதிகாரிகளின் மனப்பான்மை அலட்சியமாக இருப்பது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுவின் தவறான புரிதல் இருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்த நேபாளம் மற்றும் சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண நேபாளம் நாட்டின் அரசு சீன நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

ஆயினும், அவர்கள் சுய சார்பு உடையவர்களாக மாற "சுதேசி" இயக்கத்தை தீவிரமாகத் தொடங்குவது, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யாமல் வேறு மாற்றுத் தொழில்களை ஆதரிப்பது மற்றும் சாலை போக்குவரத்து வழிகளை மாற்றி அமைப்பது போன்ற செயல்களைச் செய்கிறது.

உலகில் சுய சார்பு உடைய நாடாக உருமாற வேண்டும் என்றால் இறக்குமதி செய்யாமல் வேறு மாற்று வழிகளில் தேசிய வருமானத்தை அதிகரிக்கும் தொழில்களை மேம்படுத்துவதே முக்கியமான மற்றும் பாராட்டுக்குரிய திட்டமாகும். இவ்வாறு நேபாளம் இறக்குமதி செய்யாமல் வேறு தொழிலை ஆதரிப்பது அனைவரும் பாராட்ட வேண்டிய ஒரு செயலாகும். மேலும், இது நேபாளத்தின் வருமானம், வேலை வாய்ப்புகள் மற்றும் செல்வத்தை அதிகரிக்க ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

Reference: ORF

Tags:    

Similar News