புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்யாலாம் ?

புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்யாலாம் ?

Update: 2020-10-20 15:42 GMT

மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காலதாமதமான திருமணம் செய்வது, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுவது போன்றவையும் இதற்கு காரணங்கள் என்று விஞ்ஞான உலகம் கூறும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொது மக்களிடமிருந்து புற்றுநோய் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றுவதை இதனுடைய முக்கியமான கருப்பொருளாகும்.புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதே இதற்குக் காரணம்.



 புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் அதனை எளிதாக குணப்படுத்திவிடலாம். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். இவர்களில் நான்கு லட்சம் பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 5.5 லட்சம் பேர் பெண்கள், 4.5 லட்சம் பேர் ஆண்களும் பாதிக்க படுகின்றனர். இவர்களில் 5 முதல் 6 லட்சம் பேர் இறக்கிறார்கள். புற்றுநோயால் குறிப்பாக இந்த மார்பக புற்றுநோய்கள் பெண்களுக்கு அதிகம் பாதிக்கப்படுவதற்கு வாழ்க்கை முறை மாற்றமே மிக முக்கியமான காரணம்.



 மார்புக்கு பகுதியில் வழி இல்லாத கட்டிகள் இருந்தால் பெண்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அதே போல ஆண்கள் தொண்டை மற்றும் நுரையீரல் புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் புகைப்பிடித்தல் ஆகும். அது தொண்டையில் புற்றுநோய் வருவதற்கு முன்பு குரலில் மாற்றம் ஏற்படும். இந்த அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவரை அணுக வேண்டும். புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

Similar News