கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான உடனடி வழிகள் என்னென்ன?

கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான உடனடி வழிகள் என்னென்ன?

Update: 2020-10-26 20:22 GMT
நிறைய பேர் கோபம் அதிகமாக தனக்கு வருவதாக கூறுகிறார்கள். அதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? அவர்களுடைய மனதை அவர்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நிலைதான். நீங்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் வாழ விரும்பினால் அதற்காக செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றே ஒன்றுதான். அதாவது கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உங்களுடைய கோபத்தை நீங்கள் கட்டுப்படுத்தாவிட்டால் உங்களுடைய ஆரோக்கியமும், அழகும் கேள்விக்குறியாக நிற்கும்.


 

உங்களுக்கு கோபம் வருகிறது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வது தான் கோபத்தை குறைப்பதற்காக நீங்கள் எடுக்கும் முதல் அடியாக இருக்கும். சிலர் அபாயகரமாக அளவுக்கு அதிகமாக கோபம் கொள்வார்கள். ஆனால் தங்களுக்கு கோபம் வருவதை அவர்கள் ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆக நீங்கள் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் நிச்சயம் கேள்விக்குறியாகத்தான் நிற்கும். அதனால் முதலில் நீங்கள் கோபக்காரர்கள் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒத்து கொண்டதுடன் எந்த சூழ்நிலையில் உங்களுக்கு கோபம் வரும் என்பதை கண்டறிந்த அந்த சூழ்நிலையை தவிர்க்க முன்வரவேண்டும்.


 

சிலர் உங்களுக்கு கோபம் ஊற்றுவது வாடிக்கையாக வைத்து இருப்பார்கள். அவர்களை உதாசீனப்படுத்தும் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், தன்னிலை என்ற நிலையை இழக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருங்கள். அந்த உறுதி உங்களுக்கு கோபம் வராத அளவுக்கு செய்துவிடும். அது உங்களுக்கு புதிய சக்தியை தரும் இதை எல்லாம் மீறி உங்களுக்கு கோபம் வந்துவிட்டால் அந்த இடத்திலிருந்து சென்றுவிடுங்கள். ஒரு கப் தண்ணீர் பருகுங்கள். அறையை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு செல்லுங்கள். நேரம் செல்ல செல்ல உங்களுடைய கோபம் சற்று குறைந்துவிடும். 

Similar News