"பிராமணர்கள் இல்லாவிட்டால் இந்துக்களை எளிதில் மதமாற்றம் செய்ய முடியும்" என்ற பிரபல கிறிஸ்தவ மிஷனரி யார் என தெரியுமா?
தமிழ்நாட்டில் கிறிஸ்தவத்தை பரப்பும் மிஷனரியாக இருந்தும், இறந்து கிட்டதட்ட 80 வருடங்களுக்கு பிறகு மெரினா பீச்சில் சிலை வைக்கப் படும் அளவுக்கு செல்வாக்குடன் இருந்த எவாஞ்சலிஸ்ட் ராபர்ட் கால்டுவெல், பிராமணர்களுக்கு எதிரான இயக்கங்களுக்கு புத்துயிர் அளித்தார்.
இதற்காகவே திராவிட இயக்கங்களால் புகழப்படும் இவர் மதம் மாற்றி, கிறிஸ்தவத்தை இங்கே பரப்பவே தமிழ் கற்றவர். மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை அறிய அவருக்கு தமிழ் தேவைப்பட்டது. இதற்கு தடையாக பிராமணர்கள் இருப்பதாக அவர் உணர்ந்தார். ஏன்?
அவருக்கு நெடுநாள் முன்பாக இந்தியாவிற்கு மிஷனரியாக வந்து சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் என்பவர் கட்டாய மத மாற்றங்களை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தி, குழந்தைகளை குறிப்பாக இலக்குவைத்து, கோவில்கள் மற்றும் ஹிந்துக் கடவுளர்களின் திருவுருவ சிலைகளை உடைப்பதை தானாகவே ஒப்புக் கொண்ட ஒரு மத வெறியர்.
இவரைப்பற்றி கிறிஸ்துவ வரலாற்றாசிரியர்கள் ஆஹா, ஓஹோவென புகழ்ந்தாலும் தற்போது அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரின் குற்றங்களுக்காக சர்வதேச சமூகத்திடம் நிற்க வைக்கப்பட்டு இருப்பார் என்பதே உண்மையாகும்.
கோவாவில் பழைய பழமையான சிவன் கோவில்களை தகர்த்துவிட்டு அதில் சர்ச்சுகள் 1590களில் எடுப்பதற்கு இவர் முக்கிய காரணமாக இருந்தார். இவரைக் குறித்து ஹிந்துத்துவாவின் சீதாராம் கோயல் நிறைய கருத்துக்களையும் உண்மைகளையும் வெளியிட்டிருந்தார்.
போர்ச்சுகீசியர்கள், ஹிந்துக்கள் சாத்தான்களை கும்பிடுவதாக மக்களை நம்ப வைக்க முயற்சித்தனர். ஒரு கடற்கொள்ளையன் ஆன பிரான்சிஸ் சேவியர் மிஷனரியாக இந்தியாவிற்கு 1542ல் வந்து சேர்ந்தார். Paganism அதாவது உள்ளூர் நம்பிக்கைகளை முழுவதுமாக தகர்த்து, கிறிஸ்தவத்தை இந்தியாவில் நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் வந்து சேர்ந்தார். அவருடைய சரிதைகள் பலரால் எழுதப்பட்டுள்ளன.