தீவிரவாத அமைப்புகளிடமிருந்து நன்கொடை? விசாரணை வளையத்தில் 'அல் இஸ்லாம்' அறக்கட்டளை!

Update: 2021-07-25 13:28 GMT

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டி இந்தியாவின் அமைதியை குலைக்க பல தீவிரவாத அமைப்புகள் முயற்சி செய்த வண்ணம் உள்ளன. தொண்டு நிறுவனங்களுக்கு நிதி என்கிற பெயரில் இவை பெறப்படுகிறதா?

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), அல் இஸ்லாம் தொண்டு அறக்கட்டளை என்ற அமைப்பு ₹1.87 கோடி அளவுக்கு நிதியை நன்கொடையாக பெற்றுள்ளதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

நன்கொடை அளித்தவர்கள் பின்புலத்தை ஆராய்ந்த போது திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியானதாகத் தெரிகிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் எச்சரிக்கை பட்டியலில் இருக்கும் தீவிரவாதத்திற்கு நிதி அளிக்கும் அமைப்புகளான குவைத்தை சேர்ந்த ஜாமியத் அஹ்யாவுள் துரஷ் அல் இஸ்லாமி உள்ளிட்ட அமைப்புகள் நன்கொடை அளித்திருப்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும் எனவும் LRO தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விசர்ரணை கோரி உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக LRO குறிப்பிட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News