காஷ்மீரில் G 20 மாநாடு - கெத்து காட்டும் மோடி அரசு, பற்றி எரியும் இடதுசாரி!

பெரும் பரபரப்புகளுக்கு மத்தியில் G20 மாநாடு காஷ்மீரில் நடைபெற்று உள்ளது.

Update: 2023-05-25 03:33 GMT

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ- காஷமீர் சர்வதேச மாநாட்டு அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. காஷ்மீரின் தற்போது மூன்று நாட்கள் ஜி 20 கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் 60க்கும் அதிகமான சர்வதேச பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இதன் காரணமாக காஷ்மீர் தற்போது பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் உள்ள காரணத்தினால் இந்த கூட்டமானது காஷ்மீரில் நடத்த மோடி அரசு முடிவு செய்து இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் குறிப்பாக காங்கிரஸ் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்த காஷ்மீர் வேறு, தற்போது இருக்கும் காஷ்மீர் வேறு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போது காஷ்மீர் பயங்கரவாதத்தின் குடிலாகவே இருந்திருக்கிறது.

எப்பொழுதும் கலவரத்தின் பூமியாகவும் மக்கள் பயத்துடன் இருக்கும் ஒரு பிரதேசமாகவும் தான் காஷ்மீர் வர்ணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது பிரதமர் மோடி அவர்கள் தலைமையின் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து தடை செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பிரதேசம் தான் என்பதை உலகிற்கு உணர்த்தி இருக்கிறது. இதன் காரணமாக தற்போது அமைதியாக மக்கள் அங்கு இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இடமில்லை.


சர்வதேச அளவில் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளை உள்ளடக்கியது தான் ஜி20 மாநாடு. உலக அளவில் நடக்கும் அதிகமான வர்த்தகத்தில் 85 சதவீதத்திற்கும் இந்த 20 நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தகைய பெருமை வாய்ந்த ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று இருக்கிறது. அதனுடைய மூன்று நாள் கூட்டம் காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது உண்மைதான் மிகவும் அமைதியான வழியில் தற்பொழுது அந்த கூட்டமானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அதற்கு முற்றிலும் காரணம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.


கடந்தாண்டு இந்தோனேசியாவுக்குத் தலைமை பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு இந்தியாவுக்குத் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டின் இறுதியில் நடக்கும். பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட காஷ்மீரின் ஸ்ரீநகரில் தற்போது நடக்கும் சர்வதேச முதல் கூட்டம் இதுதான். இதற்காகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரில் ஜி20 கூட்டம் நடத்தப்படும் போதிலும், இதற்குப் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சீனா உள்ளிட்ட சில நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.


ஜி 20 நாடுகளின் தலைமை கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனா கூட்டாக இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி என்று தெளிவாக உள்ள போதிலும், அதைச் சர்ச்சைக்குரிய பிரதேசம் எனக் கூறி இருக்கிறது சீனா. மேலும் அங்கு இதுபோன்ற சர்வதேச கூட்டங்கள் நடத்துவது கடுமையாக எதிர்ப்பதாகவும் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இதன் காரணமாக தங்கள் அதில் பங்கேற்கவில்லை என பாகிஸ்தான் மற்றும் சீனா தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News