"அப்போ காங்கிரஸ் கூட கூட்டணி வச்சா அம்போதானா?" - இன்றைய முடிவுகளால் பீதியாகும் தி.மு.க.!

"அப்போ காங்கிரஸ் கூட கூட்டணி வச்சா அம்போதானா?" - இன்றைய முடிவுகளால் பீதியாகும் தி.மு.க.!

Update: 2020-11-10 15:37 GMT

அரசியல் களத்தில் என்னதான் கொள்கைகள், கருத்துக்கள், சேவைகள், மக்களிடம் பிரபலமான முகம், கட்சியை விளம்பர படுத்த கட்டுகட்டாக பணம் இருந்தாலும் கடைசியில் அதிர்ஷ்டம் மற்றும் கடவுளின் கருணை போன்ற இரண்டுமே முக்கியம். 

அந்த வகையில் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி ஒரு தரைதட்டி திசையறியாமல் நிற்கும் கப்பல் இனி அதில் பயணம் செய்ய முடியாது வேண்டுமென்றால் உடைத்து விற்றால் ஏதேனும் தேறும் என்கிற ரேஞ்சில் உள்ளது. அது மட்டுமல்லாமல் தற்பொழுது மத்திய அரசில் ஆதிக்கம் மட்டுமல்ல மாநில அரசுகளிலும் பா.ஜ.க கோலோச்ச துவங்கியுள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கிட்டதட்ட பா.ஜ.க இன்றி அரசியல் செய்ய இயலாது. மற்ற கட்சிகள் ஒன்று பா.ஜ.க'வை ஆதரித்தோ அல்லது பா.ஜ.வை திட்டியோ'தான் அரசியல் பாதையில் தற்பொழுது பயணிக்க இயலும் மீறி பா.ஜ.க'வை புறக்கணித்து அரசியலை செய்ய மற்ற கட்சிகளால் முடியாது.

இந்த நிலையில் மாநில கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்து வரும் நிலையில் அது மூழ்கும் கப்பலில் தேவையில்லாத சுமையை ஏற்றுவது போன்றதாகும். இந்த நிலைதான் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்.

இப்பொழுது பீகாரில் காங்கிரஸ் கட்சியுடன் ஆர்.ஜே.டி கூட்டணி பின்தங்கி தோல்வியை தழுவும் நிலையில் உள்ளது. பா.ஜ.க மற்றும் ஜே.டி.யு கூட்டணி ஆட்சியை கண்டிப்பாக கைபற்றிவிடும்.

இது மட்டுமல்லாமல் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்த கட்சிகள் காணாமல் போக தயாராகியுள்ளன. கர்நாடகத்தில் நடைபெற்ற இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணியே முன்னிலை காங்கிரஸ் அணையும் விளக்காகி விட்டது.

உத்திரபிரதேசத்தில் ஏழு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை காங்கிரஸ் கட்சியை தேட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் இந்த 28 தொகுதி இடைத்தேர்தலில் சரிபாதிக்கும் மேல் அதாவது 18 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை அங்கும் காங்கிரஸ் பிராணவாயு செலுத்தப்பட்ட நோயாளி போல் உள்ளது.

குஜராத் மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 7 தொகுதியில் பா.ஜ.க முன்னிலையிலும் காங்கிரஸ் கட்சியை "எங்கே காணோம்" என தேடும் இடத்திலும் உள்ளது.  ஹரியானா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்திலும் இதேபோல் காங்கிரஸ் கட்சியை "காணவில்லை" என தேடி விளம்பரம் செய்யும் அளவில் உள்ளது. 

இன்றைய தேர்தல் முடிவுகளின் வரலாறுகள் இவ்வாறு இருக்கையில் இன்னும் 5 மாதங்களில் தமிழகம் ஓர் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் நிலையில் உள்ளது. இந்த தேர்தலில் "காணவில்லை" பிரபலம் காங்கிரஸ் கட்சியுடன் திராவிட முன்னேற கழகம் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க உள்ளது. காங்கிரஸ்'ன் இந்த "அதிர்ஷ்ட காற்றில்" தி.மு.க கலந்துவிட காத்துக்கொண்டிருக்கிறது.

Similar News