பாலக்காடில் போட்டியிடும் 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன்? வெற்றிவாய்ப்பு எப்படி?

Update: 2021-03-13 12:46 GMT

இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில் அதிகாரப்பூர்வமாக தனது வேட்பாளர் பட்டியலை கேரள பா.ஜ.க வெளியிடவில்லை என்றாலும், பல தொகுதிகளில் யார் வேட்பாளராக நிற்பார் என்ற யூகங்களும் கணிப்புகளும் வெளியாகியிருக்கின்றன. இதில் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் பாலக்காடு தொகுதியிலிருந்து வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொல்லப்போனால் நேற்றிலிருந்து (12 மார்ச்) அதிகாரப்பூர்வமற்ற முறையில் அவருடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியதாக மனோரமா செய்திகள் செய்தி வெளியிட்டு, அவருடைய ஒரு சிறிய பேட்டியையும் ஒளிபரப்பியது. அவர் நிறைய விஷயங்களை அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அதில் முக்கியமானதாக, மலப்புரம் மாவட்டத்தில் அவர் 10 வருடங்களாக வாழ்ந்து வந்தாலும் அவர் பிறந்தது பாலக்காடு, தன்னுடைய பரந்த அனுபவம் இம்மாவட்டத்திற்கு சேவை செய்ய உதவி புரியும் என நம்புகிறார். முன்னேற்றம் தான் முக்கிய வளர்ச்சி, கேரள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழில்துறை வளர்ச்சியை கொண்டு வர அவர் விரும்புகிறார். அந்த தொகுதியில் கட்சி தொண்டர்களின் வலுவான ஆதரவோடு வெற்றி பெறுவார் என்று நம்புகிறார்.

வெற்றி பெறும் வாய்ப்பு எந்த அளவு உள்ளது?

கடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களில் அதாவது 2011, 16 பாலக்காடு தொகுதி ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ வை தேர்ந்தெடுத்தது. ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) என்ற அந்த கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இருந்தது. இந்த தொகுதியில் கிட்டத்தட்ட 30 சதவிகித முஸ்லிம் வாக்குகள் இருந்தன. இதனால் காங்கிரஸ் சார்பில் ஷாபி பரம்பலை 2011, 16 இல் போட்டியிடச் செய்தது. ஒரு வசதியான வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் கட்சியும் இன்னும் தன்னுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை என்றாலும் ஷாபி மறுபடியும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அது கூட்டாளியாக இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் சார்பில் (LDF) சட்டசபை தேர்தலுக்கு ஒரு புது முகமான சிபி பிரமோத் என்பவரை களத்தில் இறக்கினர்.

2011 இல் மிகவும் பின்தங்கி மூன்றாவது இடத்தில் இருந்த பா.ஜ.க, இரண்டாவது இடத்திற்கு 2016 இல் வந்தது என்றாலும் அதனுடைய வாக்குவங்கி கேரளா முழுக்க அப்படியே இருந்தது.  


E . ஸ்ரீதரன் தன்னுடைய வாக்காளர் தளத்தையும் தாண்டி மக்களை ஈர்க்க முடியுமா? 2016இல் பிஜேபி வேட்பாளராக நின்றவர் ஷோபா சுரேந்திரன், அவர் ஒரு வலிமையான வேட்பாளர். ஸ்ரீதரன் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமான கவனம் வளர்ச்சியில் இருக்கும் என்றாலும், தான் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கிலிருந்து (RSS) உத்வேகம் பெறுவதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர் கேரளாவில் லவ் ஜிகாத் நடைபெறுகிறது என்றும் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் முஸ்லிம்களால் மத மாற்றத்திற்காக அதில் சிக்க வைக்கப்படுகிறார்கள் என்று கூறியதும் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் ஆகும். முஸ்லிம்கள் இந்த தொகுதியில் UDFக்கு அப்படியே ஓட்டு போட்டால், இந்து மற்றும் கிறிஸ்தவ வாக்குகள் அப்படியே இருக்குமானால், ஸ்ரீதரனுக்கு 65 ஆயிரம் ஓட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிசம்பர் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி அமைப்பு தேர்தல் வாக்குகளின் ஒரு தோராயமான ஓட்டுகளை நாம் அடிப்படையாக எடுத்துக் கொண்டால், ஸ்ரீதரன் வெற்றி வாய்ப்பை பெறுவதற்கு தமது வாக்குகளை கிட்டத்தட்ட 60 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும்.

அந்த 25 ஆயிரம் கூடுதல் வாக்குகள் அனைத்தும் UDFல் இருந்து மட்டுமல்லாமல், LDFல் இருந்தும் வரவேண்டும். காங்கிரசில் இருந்து கோபித்துக் கொண்டு தனியாக போட்டி போடும் கோபிநாத் இந்த முறை UDF வாக்குகளுக்கு சில சேதங்களை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அது போதாது.

பா.ஜ.க அதன் பாரம்பரிய வாக்கு தளத்தை தாண்டி வித்தியாசமாக சிந்திக்க வேண்டி இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் ஸ்ரீதரன் போன்ற ஒருவர் வேட்பாளராக நிற்பது வெற்றி பெற ஒரு பொன்னான வாய்ப்பு. பாலக்காடு நகராட்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து இருந்தாலும், அதைச் சுற்றியுள்ள மூன்று கிராம பஞ்சாயத்துக்களில் அது மூன்றாவது இடத்தில் இருந்தது. இவை பாலக்காடு சட்டமன்ற தொகுதியில் ஒரு பகுதி ஆகும்.

UDF நான்கு பிரிவிலும் முன்னணியில் இருக்கவில்லை என்பது நல்ல விஷயம். மாத்தூர் மற்றும் கண்ணடியில் LDF முன்னிலை வகிக்கிறது. கிராம பஞ்சாயத்துக்களில் இதுவரை வாக்காளர் தளம் இல்லை.

அதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம். ஸ்ரீதரனும் அவரது பிரச்சார குழுவும் நகரத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வளர்ச்சி நடவடிக்கைகள் அறிக்கையிலும், பிரச்சாரத்திலும் சேர்க்கப்படவேண்டும். இதில் குறைந்தது ஐயாயிரம் வாக்குகளும் கண்ணடி மற்றும் மாத்தூரில் தலா 2,500 வாக்குகளும் பெறவேண்டும்.

மீதமுள்ள 15 ஆயிரம் வாக்குகள் (அதாவது மொத்தம் கூடுதலாக 25 ஆயிரம் வாக்குகள் வேண்டும் என்று கணக்கில் கொண்டால்) அது முனிசிபாலிட்டி நகரத்தில் இருந்து வரவேண்டும். UDF இருந்து வரும் ஒவ்வொரு ஓட்டும், இரண்டு ஓட்டுகளை குறைப்பதற்கு சமமாகும்.

எல்லா கட்சிகளிலும் சேர்த்து ஸ்ரீதரனை போன்ற அந்தஸ்துடைய ஒருவர் கேரளாவின் 60 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தேர்தலில் நிற்கிறார். அவர் பா.ஜ.கவில் இணைந்தது ஏற்கனவே தேசிய மீடியாக்களில் பெரும் கவனத்தைப் பெற்றது. எனவே பாலக்காடு தேர்தலும் தேசிய அளவில் கவனிக்கப்படும் என்று நாம் நம்பலாம்.

எந்த அளவிற்கு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மாநிலம் என்று கேரளாவை குறித்த பார்வையும் மாறுபடலாம். கேரளாவில் சமீபத்தில் இரண்டு வெற்றிகரமான திட்டங்களை (கொச்சி மெட்ரோ, மற்றும் திட்டமிட்டு அதற்கு முன்பே முடிக்கப்பட்ட பலரிவட்டோம் பாலம்) மற்றும் பல நாடு முழுவதும் பல வெற்றிகரமான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்த ஒருவர், ஊழல் நிழல் என்றென்றும் விழாதவர், கேரளாவில் ஒரு தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றால் கேரளா முற்போக்கான மாநிலம் என்பது வெற்று பேச்சு, மக்கள் இன்னும் மத மற்றும் கட்சி அடிப்படையில்தான் ஓட்டு போடுகிறார்கள் என்பது உறுதியாகும்.

இங்குதான் பாலக்காட்டில் வசிக்காமல் பாலக்காடை பூர்வமாக கொண்டவர்களில் பங்கு முக்கியம் ஆகிறது. பாலக்காடு முனிசிபாலிட்டி பகுதியில் பல வயதான பெற்றோர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுடைய நன்கு படித்த குழந்தைகள் கேரளாவிற்கு வெளியே வேலை பார்க்கிறார்கள். தொழிற்சாலைகள் குறைவாக இருப்பது, திறனுடைய வேலைகள் குறைவாக இருப்பது கேரளாவுடைய சாபம். அது பாலக்காட்டில் தெளிவாக தெரியும்.

இது வெறும் இன்ஜினியரிங் வேலைகள் மட்டுமல்ல, பல்நோக்கு மருத்துவ மனைகள் கூட மிகவும் குறைவாக இருந்து, பல நோயாளிகள் சிறப்பு சிகிச்சைகளுக்காக மாநிலத்திற்கு வெளியே செல்கிறார்கள். நீங்கள் பாலக்காடு மாவட்டத்தில் பயணித்தால் பல விவசாயம் செய்யக்கூடிய நிலங்கள் காலியாக இருப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது. இது தொழிலாளர் அதிக கூலி, வேலைநிறுத்த பயம் ஆகியவை காரணமாக விவசாய சம்பந்தமான வேலைகளை செய்ய விடாமல் முதலாளிகளை தடுத்து வைத்துள்ளது.

பல சிறிய தொழிற்சாலைகளும் கூட போராடி வருகின்றன. இதனால் பாலக்காட்டில் தங்கள் பெற்றோர்கள் இருக்கும் பிள்ளைகள், 88 வயதில் ஸ்ரீதரன் இந்த நிலைமையை மாற்ற போராடி வருவதை எடுத்துக் காட்டி ஓட்டு போட சொல்லவேண்டும். ஸ்ரீதரன் தேர்தலில் நிற்பது பக்கத்து தொகுதிகளிலும் ஒரு பரபரப்பை உருவாக்கி அங்கேயும் பா.ஜ.கவிற்கு அனுகூலத்தை உருவாக்கலாம்.

சில கருத்து கணிப்புகள் அக்கம்பக்கத்து தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓட்டு பங்கு 28.5 சதவிகிதம், 25 சதவிகிதம் 24.5 சதவிகிதம் என்று ஸ்ரீதரன் வேட்பாளராக நிற்பதற்கு முன்பே கணிக்கப்பட்டது.

மும்முனை போட்டிகளில் 36 சதவீத ஓட்டுகள் கூட உங்களை வெற்றிக்கு அருகே கொண்டு செல்லலாம். மற்ற இரு கூட்டங்களில் ஓட்டு எப்படி பிளவு படுகிறது என்பதைப் பொறுத்து இது அமையும். ஒரு தொழில்துறை மயமாக்கப்பட்ட மாவட்டமாக கேரளாவில் ஆக்குவதற்கு இது முதல்படியாக அமையும். சரியாக கவனித்தால் இது கேரளாவின் குஜராத் போன்ற ஒரு மாவட்டம் என்ற பெயரினை பெறலாம்.

எந்த மாதிரியான பிரச்சாரம் நடைபெறும்?

ஊழல், குடும்ப அரசியல், சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து UDF, LDF ஆகிய இரண்டின் மீதும் குற்றம் சுமத்தும். பா.ஜ.க வலுவான வேட்பாளர்களை நிறுத்தி தங்களுடைய வாக்காளர் தளத்த்தை தாண்டி மக்களை ஈர்க்க வேண்டும்.

பாலக்காடு பொருத்தவரை பா.ஜ.க தங்களிடம் இருந்த சிறந்த வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். தங்களுடைய குறுகிய அரசியல் மற்றும் மத விஷயங்களை விட்டுவிட்டு கேரளாவின் முகத்தை மாற்றுவதற்கு ஸ்ரீதரனுக்கு மக்கள் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

Reference and Inputs from: Swarajya 

Tags:    

Similar News