செங்கோலின் முக்கியத்துவம் என்ன.. தமிழக பழமைகளை மீட்டெடுக்கும் மோடியின் அரசு..

தமிழ் கலாச்சாரத்தை செங்கோல் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் மீட்டு எடுத்து இருக்கிறது.

Update: 2023-05-25 07:57 GMT

புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவின் போது, நமது பிரதமருக்கு, சோழர் காலத்துச் செங்கோல் வழங்கப் படவிருக்கிறது. இதன் காரணமாக தற்பொழுது செங்கோல் என்பது மிகவும் பிரபலமாகி வருகிறது. ஆனால் தற்போது இருக்கும் மக்களிடம் செங்கோல் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது மிகவும் வேடிக்கையானது. ஆனால் தமிழ் மக்களிடமே இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. செங்கோல் என்பதை பற்றி முதலில் பார்க்கலாம் வாங்க, செங்கோல் என்பது அரசுச் சின்னங்களுள் ஒன்றாகும். மன்னனுக்கு மகுடமும், அரியணையும் போன்றே செங்கோலும் இன்றியமையாததாகும். மன்னனின் ஆட்சி நேர்மையானதாகவும், நெறி வழுவாததாகவும் அமைய வேண்டும் என்பதன் பொருட்டே செங்கோல் எனும் நேரிய தண்டு அரசன் வீற்றிருக்கும் போதெல்லாம் கையில் காணப்படும். செம்மை+கோல் என்பதுவே செங்கோல் என்றாகும். செங்கோல் என்பதற்கு தமிழில் நேர்மை என்ற பொருளும் இருக்கிறது.


தமிழகத்தையும் செங்கோல் ஆட்சியையும் பிரிக்கவே முடியாது என்பது மற்றொரு கூற்று. தமிழ் மன்னர்கள் அனைவரும் தங்கள் ஆட்சியின் கீழ் நேர்மை தவறாது, நீதி தவறாது மக்களுக்கு நன்மை செய்து வந்திருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக தான் செங்கோல் பார்க்கப்பட்டு வருகிறது. சிலப்பதிகாரத்தில் கூட செய்யாத தவறுக்காக கோவலனைத் தண்டித்தமையால் பாண்டியன் அறம் வழுவினான். இதனால் அவன் செங்கோல் வளைந்தது என்றும், பின்னர் தன் உயிரைக் கொடுத்து வழுவிய செங்கோலைப் பாண்டிய மன்னன் நிமிர்த்தினான் என்றும் கூறப்பட்டுள்ளது. தான் உண்மை அறியாமல் ஒரு நிரபராதிக்கு தீர்ப்பு வழங்கி அவன் உயிர் பறிக்கப்பட்டு இருக்கிறது என்ற காரணத்திற்காக பாண்டிய மன்னன் உயிரைக் கொடுத்து தனது செங்கோலை நிமிர்த்தினான். இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் செங்கோலுக்கும், நேர்மையான ஆட்சிக்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு என்பதை.!


செங்கோல் மூலம் தமிழ்க் கலாச்சாரத்தை தேசிய அரங்கில் மீட்டெடுத்த பிரதமருக்கு நன்றி என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களும் தற்பொழுது தன்னுடைய twitter பதிவின் மூலமாக நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், நமது நாடு சுதந்திரமடைந்தபோது, ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில், “வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்” என்ற தேவார திருப்பதிகத்தைப் பாடி, தமிழகத்தைச் சேர்ந்த அருள்மிகு திருவாவடுதுறை ஆதீனம், பண்டித நேருவிடம் சோழ மன்னர்கள் பயன்படுத்தியதைப் போன்ற செங்கோலை வழங்கினார். தமிழ் மன்னர்கள் ஆட்சியின் முக்கிய அங்கமாக விளங்கிய செங்கோலின் முக்கியத்துவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விரிவாக பேசியிருக்கிறார். சங்ககாலத்திற்குப் பிறகு முக்கியத்துவத்தை இழந்த செங்கோல் தற்பொழுது பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியின் போது நமது பாரத கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மீண்டும் செங்கோல் புத்துயிர் பெற்று இருக்கிறது.


புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவின் போது, நமது பிரதமருக்கு, சோழர் காலத்துச் செங்கோல் வழங்கப்படவிருக்கிறது. புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை அலங்கரிக்கும் வகையில் இந்த செங்கோல் இடம்பெறும். தமிழ் கலாச்சாரத்தை தேசிய அளவில் இடம்பெற செய்த பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ் மக்கள் அனைவரும் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

Similar News